காதலில் விழுவது என்பது இதுதானோ..🙄? கிழே விழுந்த மணமக்கள்! வைரல்!

Published:

marriage
marriage

திருமண நாளில் நடனமாடும் போது மணமகனும், மணமகளும் கீழே விழுந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நடக்கும் சுவையான சம்பவங்கள் எப்பொழுதும் மறக்க முடியாதவை ஆகும்.

திருமண நிகழ்வுகளில் சில சமயங்களில் சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெறுவதற்கு கூட வாய்ப்பு உண்டு. அதில் ஒரு சில நிகழ்வுகள் வைரலாகி வருகிறது. அந்த வரிசையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வெளிநாடுகளில் திருமணத்தின் போது நடனம் ஆடுவது ஒரு வழக்கமான நிகழ்வாகும். தற்போது இந்த வழக்கம் நம் இந்தியாவிலும் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருகிறது.

திருமண நிச்சயதார்த்தங்களிலும், முகூர்த்தங்களிலும் மணமகனும், மணமகளும் ஆடி வருகின்றனர். இதுபோன்ற காணொளிகள் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றிலும் காணலாம்.

திருமணம் போன்ற நிகழ்வில் மட்டும் இல்லாமல், இதர விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடி காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிரும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!
fall down
fall down

இந்தநிலையில் அண்மையில் திருமண விழா ஒன்றில் நடைபெற்ற மணமக்களின் நடனம் வைரலாகி வருகிறது. சமீபத்தில் தில்லியில் திருமண விழா ஒன்று நடைபெற்றது.

அதில் அழகான உடைகளை அணிந்திருந்த திருமண ஜோடி நடனம் ஆடத் தொடங்குகின்றனர். அப்போது சுற்றி இருந்தவர்கள் எல்லாம் கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர்.

திருமண ஜோடி இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டு நடனம் ஆட தொடங்கினர். நடனம் ஆட தொடங்கிய சில வினாடிகளிலேயே இருவரும் கீழே விழுந்தனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காணொளியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது வேறு யாருமில்லை மணப்பெண் மேரி ப்ளான்ச்சர்ட் தான்.

மேலும் அவர் தனது பதிவில், ‘இதனை தான் காதலில் விழுவது என்று கூறுவார்கள் என்று நினைக்கிறன். நான் அவரை கவனித்தேன். அவர் என்னை கவனித்தாரா? என்று தெரியவில்லை. 5.9 அடி உயரம் கொண்ட நான் தான் இதற்கு காரணம். அவர் இந்த பிரச்சனைக்கு காரணம் இல்லை என்று நிச்சயமாக சொல்லுவேன். கீழே விழுந்தும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. டேவிட் தான் பாவம். பரிதாபமாக இருக்கிறார்’ என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இந்த வீடியோ தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது. இதுவரை இந்த காணொளியை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட லைக் செய்துள்ளனர்.

நகைச்சுவையான இந்த காணொளியின் கீழ் பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். திருமணத்தின் போது இருவரும் கீழே விழுந்ததை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்ட தம்பதியினரை பலர் பாராட்டியும் வருகின்றனர்.

‘இப்படி ஒரு திருமணத்தை கடைசி வரை உங்களால் மறக்க முடியாது’ என்றும், ‘உங்கள் குழந்தைக்கு சொல்ல கூடிய முதல் கதை இதுதான்’ என்றும் மகிழ்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img