December 6, 2025, 5:47 AM
24.9 C
Chennai

மால்வேர் ஜோக்கர்.. ஸ்குவிட் கேம் ஆப்பில் ஆபத்து!

squid
squid

நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளத்தில் கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகி சாதனை படைத்த வெப் தொடர்தான் ஸ்குவிட் கேம்.

கொரியன் மொழியில் உருவான இந்த சீரிஸ் ஆங்கிலம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட மொழிகளில் மட்டும் டப் செய்து வெளியிடப்பட்டது.

இதனை கொரியாவின் இளம் இயக்குநர் Hwang Dong-hyuk என்னும் தென் கொரிய கலைஞர் இயக்கியிருந்தார். நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் அதுவரையில் பெறாத அங்கீகாரத்தை ஸ்குவிட் கேம்ஸ் பெற்றது.

அமெரிக்காவில் டாப் 10 லிஸ்டில் முதல் இடத்தை நீண்ட காலமாக தக்கவைத்தது ஸ்குவிட் கேம். மேலும் அமெரிக்காவில் அதுவரையில் எந்த ஒரு கொரியன் சீரிஸுக்கும் இப்படியான வரவேற்பும் கிடைத்ததில்லை என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

squid game
squid game

பொதுவாகவே ஒரு படம் அல்லது இது போன்ற வெப் சீரிஸ் ஹிட் அடித்தால் அந்த படம் தொடர்பான , அல்லது படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் தொடர்பான புகைப்படங்களை மொபைல் மற்றும் லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களில் wallpaper -ஆக செட் செய்வது, themes ஐ டவுன்லோட் செய்வது , மேலும் அது தொடர்பாக ஏதேனும் விளையாட்டுகள் இருந்தால் அதனை டவுன்லோட் செய்வது போன்ற பல முயற்சிகளில் ஈடுபடுவோம்.

இதனை நன்கு அறிந்த சில வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் இதற்காக நூற்றுக்கணக்கான செயலிகளை பிளே ஸ்டோரில் களமிறக்கிவிடுவார்கள்.

அப்படிதான் இன்று ஸ்குவிட் கேம் என்ற புகழ்பெற்ற வெப் தொடர் தொடர்பான செயலிகள் பிளே ஸ்டோரில் ஏராளமாக கொட்டிக்கிடக்கின்றன.

அதில் ஒரு ஸ்குவிட் கேம் வால்பேப்பர் செயலியில் மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ReBensk என்னும் ட்விட்டர் முகவரி கொண்ட நபர் வெளியிட்ட அறிவிப்பில் squid game wallpaper என்னும் செயலியில் தீங்கிழைக்கும் ‘ஜோக்கர்’ வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

squid game wallpaper அப்ளிகேஷனை இதுவரையில் 5 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். அவர்களில் சிலர் தங்களுக்கு தெரியாமலேயே விளம்பர மோசடி அல்லது விலை உயர்ந்த எஸ்.எம்.எஸ் பிளான்களை ஆக்டிவேட் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.

விஷயத்தை அறிந்த கூகுள் நிறுவனம் , உடனடியாக அந்த செயலியை தனது பிளே ஸ்டோர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டது. என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகளை கூகுள் அதிகப்படுத்தினாலும் , பிளே ஸ்டோர் பக்கங்களில் தீங்கிழைக்கும் செயலிகள் உள்நுழைவதை கண்டறிவது கடினம் என்கிறனர் மால்வேர் ஆராய்ச்சியாளர்கள்.

மேலும் ஸ்குவிட் கேம் தொடரில் வரும் பிரபல விளையாட்டான , ரெட் லைட் ,கிரீன் லைட்டை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “Squid Games—The Game” என்ற செயலியை இதுவரையில் மில்லியன் கணக்கானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

ஆனால் அது அதிகாரபூர்வமற்ற செயலி என்றாலும் அதில் ஆபத்தில்லை என்கின்றனர். ஆனாலும் அதிகாரப்பூர்வமற்ற செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யும் பொழுது விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்கிறனர் வல்லுநர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories