
மணமகனாக இருந்தாலும் சரி, மணப்பெண்ணாக இருந்தாலும் சரி, ஒவ்வொருவரும் தங்கள் திருமண நாளில் அழகாக இருக்க விரும்புகிறார்கள். ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கிய நாள் ‘திருமண நாள்’. வாழ்க்கை முழுவதும் அந்த நிகழ்வு மறக்க முடியாதது.
இப்படிப்பட்ட நிகழ்வு எப்படி இருக்க வேண்டும், யார் யார் இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று தெளிவாக பார்த்து பார்த்து முடிவு எடுக்கிறார்கள் இன்றைய திருமண ஜோடிகள்.
அதிலும் மணப்பெண்கள் தங்கள் திருமண ஆடையை தேர்ந்தெடுப்பது முதல் மேக்அப் வரை திருமணத்திற்கு முன்னரே தேர்வு செய்து விடுகின்றனர். இதேபோல தான் மணமகன்களும் ஆடை, ஹேர் ஸ்டைல், மேக்அப் என எல்லாவற்றிலும் கண்ணும் கருத்துமாய் பார்த்து பார்த்து செய்கின்றனர் .
திருமணத்தில் மணமகளின் அழகு மற்றும் அலங்காரம் ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண ஆடைகள், ஹேர் ஸ்டைல், மேப்அப் என பல விஷயங்களில் மணப்பெண்கள் செலவிடுகிறார்கள்.
அதாவது திருமணத்திற்கு முன்பே எப்படி இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். திருமண நாள் அன்று அவர்களை அழகாக அலங்கரிக்க, தயார் செய்ய பலர் பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள்.
மணமகன்களுக்கு அப்படி இல்லை. மணமகனோ தனக்கு தானே அலங்காரம் செய்து வருகிறார்கள். இதுதான் அப்போதிலிருந்து வழக்கமாக இருக்கிறது. ஆனால் தற்போது மணமகன்களும் மணமகளுக்கு இணையாக அலங்காரம் செய்ய தொடங்கி இருக்கின்றனர்.
நடனம், பாட்டு, எமோஷனல் நிகழ்வு என திருமணத்தில் நடக்கும் விஷயங்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆவது உண்டு.
இந்தநிலையில் ஒரு மணமகன் தனது திருமணத்திற்காக மணமகளை மேக்அப் செய்ய விடாமல், தான் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்த காணொளியில், ‘மணமகன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு மேக்அப் செய்து கொண்டிருக்கின்றனர் ஒப்பனையாளர்கள்.
மணமகளோ தயாராகாமல் இருக்கிறார். ‘நீ சீக்கிரம் மேக்அப் செய்து கொண்டு கிளம்பு. நான் இன்னும் தயார் ஆகவே இல்லை. நான் எப்போது மேக்அப் செய்து தயார் ஆவது’ என கெஞ்சுகிறார்.
‘தி பிரைட்ஸ் ஆப் இந்தியா’ (the brides of india) என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்ட நிலையில் தற்போது வைரலாகி வருகிறது. “மாப்பிள்ளை திருமணத்தில் உற்சாகமாக இருந்தால் இப்படிதான் நடக்கும்” என இந்த வீடியோவுக்கு தலைப்பிடப்பட்டிருந்தார்கள்.
மணப்பெண்ணை டார்ச்சர் செய்வதில் என்ன சந்தோசம் இந்த ஆண்களுக்கு, திருமணத்தின் போது ஒவ்வொரு ஆண்களும் பெண்களுக்கு போட்டியாக மேக்அப் செய்து கொள்ள வேண்டும்.
பெண்கள் மட்டும் தான் அழகாக தயார் ஆக வேண்டுமா என்றும், மணமகன்கள் இப்படி செய்தால், மணமகள்கள் பாவம் ‘ என்றும் ஒவ்வொருவரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
‘தி பிரைட்ஸ் ஆப் இந்தியா’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது போன்ற பல்வேறு வீடியோக்கள் இடம் பெற்றுள்ளது. திருமணம்,வெட்டிங் போட்டோ சூட் என பல்வேறு நிகழ்வுகளை நடத்தி தரும், ஒரு ‘ஈவென்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஆகும். இந்த பக்கத்தினை இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.