
லக்னோ மெட்ரோ ரயில் நிலையத்தில் குரங்குகளின் அட்டகாசத்தை தடுக்க லங்கூர் குரங்குகளின் கட் அவுட்களை ஆங்காங்கே வைத்துள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநில லக்னோவில் மெட்ரோ ரயில் நிலையங்களின் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் இருந்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை எடுத்து சென்றுவிடுகின்றன.
குரங்குகளின் அட்டகாசம் காரணமாக மெட்ரோ ரயில் நிலைய ஊழியர்களும், பயணிகளும் அச்சத்தில் இருந்தனர். மெட்ரோ ரயிலில் குரங்குகள் ஏறாமல் தடுக்க, ரயில் நிலையத்தில் லங்கூர் வகை குரங்கு பொம்மைகளும் அவை அலறும் ஒலியும் ஒலிபரப்பப்படுகிறது.
மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்த இந்த முயற்சி ஒரளவுக்கு அவர்களுக்கு பலனை அளித்துள்ளது. பாட்ஷா நகர் ரயில்நிலையத்தில் குரங்கு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனை கண்டு குரங்குகள் வராமல் உள்ளதாகவும், ஆக்ரோஷமான குரங்கின் ஒலியும் சேர்த்து ஒலிக்கும்போது, குரங்குகள் நுழைவது தடுக்கப்படுவதாகவும் மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பேசிய அதிகாரிகள், “லக்னோவில் குரங்குகள் அச்சுறுத்தல் இருக்கும் 9 ரயில் நிலையங்களில் லங்கூர் வகை குரங்குகளின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் லங்கூர் குரங்குகள் ஆக்ரோஷமாக கத்தும் சத்தத்தை ரயில் நிலையங்களில் ஒலிக்க செய்தோம். ஆரம்பத்தில் இது தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அது நீண்ட நாள்களுக்கு நீடிக்கவில்லை.
இதனையடுத்து லங்கூர் கட் அவுட்களை ரயில் நிலையங்களில் வைப்பது என முடிவு செய்தோம். தற்போது குரங்குகளின் அச்சுறுத்தல் இருக்கும் ரயில் நிலையங்களில் கட் அவுட்களை வைத்துள்ளோம்.
குரங்குகளின் ஆக்ரோஷமான சத்தத்தை ஒலிக்க செய்கிறோம். இந்த கட் அவுட்களை அடிக்கடி வெவ்வேறு இடங்களின் மாற்றி வைக்கிறோம்.” என்றனர்.
Lucknow Metro places cutouts of Langurs at nine metro stations that are experiencing monkey menace, in a bid to scare away monkeys. Visuals from Badshah Nagar metro station. pic.twitter.com/5OxQBVjsgR
— ANI UP (@ANINewsUP) October 31, 2021