
பொதுவாக உணவு தொடர்பான வீடியோ என்றால் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாவது வழக்கம்.
அதிலும் குறிப்பாக அந்த உணவில் ஒரு விதமான ஆச்சரியமான அல்லது வித்தியாசமான பொருட்கள் சேர்க்கப்பட்டால் அதை பலரும் பார்த்து மகிழ்வார்கள்.
அந்தவகையில் தற்போது மீண்டும் ஒரு உணவு தொடர்பான வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் வைரலாகி உள்ளது. இப்படி அந்த உணவு திடீரென்று வைரலாக காரணம் என்ன?
இந்த உணவு தொடர்பாக உணவு ரிவ்யூ செய்யும் ஒருவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் நெருப்பை வைத்து சாஸ் ஊற்று மோமோஸ் செய்யும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதாவது முதலில் அவர் மோமோஸை அடுப்பில் வைத்து வறுத்து எடுக்கிறார்.
அதன்பின்னர் அந்த வறுத்த மோமோஸ் உடன் காய்கறிகள், தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்க்கிறார். அதன்பின்பு மீண்டும் நெருப்பில் வைத்து கிண்டி எடுக்கிறார். அந்த நெருப்பில் சாஸ் மற்றும் காய்கறிகள் மோமோஸ் உடன் சேர்ந்து நன்றாக ஒட்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாவது முறையாக அவர் வறுத்து எடுக்கும் போது நெருப்பு அனல் மேலே முழுவதும் பறக்கிறது.
இந்த வீடியோ தற்போது வரை 88ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இந்த மோமோஸ் உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் சமைத்து விற்கப்பட்டு வருகிறது.
இந்த மோமோஸ் தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பை பகுதியிலுள்ள ஒரு உணவகத்தில் விற்கப்பட்டு வந்த தங்க மோமோஸ் சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வந்தது.