
உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், முதன்மையான தகவல் தொடர்பு தளமாக உள்ளது. பிரபலமான செய்தி தளமாக இருப்பதால், சமூக ஹேக்கிங் மூலம் முக்கியமான தகவல்களைத் திருட முயற்சிக்கும் ஹேக்கர்களையும் ஈர்த்துள்ளது
இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கைப் பாதுகாக்க வேண்டும்.
உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கைச் செயல்படுத்த, உங்கள் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பும் 6 இலக்க செயலாக்க குறியீடு உங்களுக்கு தேவைப்படும். அந்த 6 இலக்க செயலாக்க குறியீட்டை ஒருபோதும் யாருக்கும் பகிர வேண்டாம்
அந்த குறியீடு எண் பகிரப்பட்டால், ஹேக்கர் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை லாக் செய்ய முடியும்.. பிறருக்கு செய்தி அனுப்ப உங்கள் கணக்கு / தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.
அதனால்தான், உங்கள் வாட்ஸ்அப் செயல்படுத்தும் குறியீட்டை யாருடனும் பகிர வேண்டாம். வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் பயனர்களுக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளைத் தொடர்ந்து கொண்டுவருகிறது.
மேலும் சமூக ஹேக்கிங்கிலிருந்து பாதுகாக்க உதவும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அம்சம் இரண்டு-படி சரிபார்ப்பு Two-step verification ஆகும்.
WhatsApp Settings>Account>Two-step verification என்பதைத் கிளிக் செய்வதன் மூலம் இந்த பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் செயல்படுத்தலாம். வாட்ஸ்ஆப் 6 இலக்க பின் நம்பரை உள்ளிடுமாறு கேட்கும், ஒவ்வொரு முறையும் உங்கள் தொலைபேசி எண்ணை வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்ய வேண்டும்.
இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சத்தின் மூலம், 6 இலக்க பின் இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கரால் அணுக முடியாது. நீங்கள் பின் நம்பரை மறந்துவிட்டால் மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு உண்டு, ஆனால் அதைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.