கூகுள் நிறுவனம் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் வழிமுறையை இந்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு கொண்டுவரப் போவதாக அறிவித்து இருந்தது. அதன்படி இந்த வழிமுறை வரும் 9ம் தேதி அமலுக்கு வருகிறது.
அதன் பின்னர், ஒவ்வொரு முறையும் லாக் இன் செய்யும் போது செல்போன் அல்லது மின்னஞ்சலுக்கு ஓடிபி வரும். இதனை பதிவிட்டால் தான் கணக்கில் நுழைய முடியும். இந்த வழிமுறை பயனர் கணக்குகளை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும்.
நவம்பர் 9 ஆம் தேதி முதல் 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறை பயனரின் கூகுள் அக்கவுண்டில் தானாக அமல்படுத்தப்பட்டு விடும் என பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் கூகுள் நிறுவனம் தெரியப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 150 மில்லியன் கூகுள் பயனர்களின் அக்கவுண்ட்களுக்கு 2-ஸ்டெப் வெரிபிகேஷன் வழிமுறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூகுள் அறிவித்து இருக்கிறது.