
கனடாவில் இருந்து மீட்டு கொண்டுவரப்பட்டுள்ள காசி அன்னபூரணி சிலை காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு விஸ்வநாதருடன், அன்னபூரணி தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில், இக்கோவிலில் இருந்து நூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட காசி அன்னபூரணி சிலை கனடாவில் இருந்து மீட்டுக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரால் மீட்டு கொண்டு வரப்பட்டு தில்லியில் வைக்கப்பட்டிருந்த இச்சிலை உத்திர பிரதேச மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விஸ்வநாதர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாரணாசி விழாக்கோலம் பூண்டுள்ளது.