
யூடியூப்ஐ போலவே இன்ஸ்டாகிராமிலும் வீடியோக்களை பதிவேற்றுபவர்கள் பணம் சம்பாதிக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.
மாதாந்திர சந்தா முறை (subscription model) இன்ஸ்டாகிராமில் கூடிய விரைவில் வரும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் ஆடம் இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே கூறியிருந்தார். தற்போது இது நடைமுறைக்கு வர உள்ளது.
மாதம் ரூ. 89 செலுத்தி படைப்பாளிகளின் பிரதியாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் பார்க்க முடியும். இன்ஸ்டாகிராமில் பயனரின்(User) பெயர் பக்கத்தில் இந்த புதிய சந்தா முறைக்கான விருப்பமெனு(Option) இருக்கும் என்று கூறப்படுகிறது.
டுவிட்டர் ப்ளூ போலவே இன்ஸ்டாகிராமிலும் பிரத்தியேக வீடியோக்களை பார்க்க மாதாந்திர சந்தா முறையை கொண்டு வருகிறது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.
இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவேற்றம் செய்பவர்கள் அதன் மூலம் எவ்வளவு வருமானம் வந்துள்ளது என கணக்கிட்டுக் கொள்ளலாம். சந்தா கட்டியுள்ள பயனர்களும் எப்போது வேண்டுமானாலும் அதிலிருந்து விலகிக் கொள்ளும் வசதியையும் செய்ய உள்ளது இன்ஸ்டாகிராம்
மற்ற சமூக வலைதளங்களை போலவே தற்போது இன்ஸ்டாகிராமும் சந்தா முறையை கொண்டுவர உள்ளது.
தற்போது இன்ஸ்டாகிராம் இன்பிலியன்சர்ஸ் (influencers) என்று சொல்லக்கூடிய செலிபிரிட்டி (celebrities) ஒரு குறிப்பிட்ட பிராண்ட்- ஐ (brand) தங்களது பக்கத்தில் பதிவிடுவதற்கு குறிப்பிட்ட தொகையை பெறுகின்றனர்.
அது தொடர்பான வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இனி இவர்கள் பதிவேற்றம் வீடியோக்களின் பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இன்ஸ்டாகிராம் நிறுவனமே அவர்களுக்கு பணம் கொடுக்கும்.
மேலும் இன்ஸ்டாகிராமில் மூழ்கியிருக்கும் பயனர்களுக்கு “Take a Break” என்ற புதிய வசதியை கொண்டுவர உள்ளது. இதன் மூலம் நீண்ட நேரம் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் பயனர்கள் 10 முதல் 30 நிமிடங்கள் வரை ஓய்வு எடுத்துக்கொள்ள அந்த ஆப் வலியுறுத்தும். இந்த புதிய வசதிகள் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளது.
மொசெரி ட்விட்டரில் ஒரு சிறிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் புதிய அம்சம் “இன்ஸ்டாகிராம் அனுபவத்தின் மீது மக்களுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குவதற்கான பரந்த முயற்சியுடன் உருவாக்கப்படுகிறது” என்று விளக்குகிறார்.
எதிர்காலத்தில் இன்ஸ்டாகிராம் பயனர்கள் இதுபோன்ற பல அம்சங்களைப் பார்ப்பார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.இந்த புதிய “Take a break” அம்சத்தை சோதிக்க Instagram சில மூன்றாம் தரப்பு நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. இது வரும் நாட்களில் ஒரு சிறிய சதவீத பயனர்களுக்கு மட்டும் வெளியிடப்படும். சோதனை சீராக நடந்தால், வரும் மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தலாம்.
இன்ஸ்டாகிராம் சந்தாக்களின் விலை மாதத்திற்கு ரூ.89 என கூறப்படுகிறது. இந்த அம்சம் தற்சமயம் அனைவருக்கும் தெரிவதில்லை என்பதையும், இந்தச் சேவையானது அதிகாரப்பூர்வமாக அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்படும் போது இதுவே இறுதி விலையாக இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.