
தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது..
நாம் பெரும்பாலும் அனைத்து வேலைகளுக்குமே ஸ்மார்ட்போன்களையே நம்பி உள்ளோம்..
அந்தவகையில் ஸ்மார்ட்போன் பயனர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய கூகுள் பிளேஸ்டோர் மட்டுமின்றி தெரியாத தளங்களில் இருந்து அடிக்கடி செயலிகளை பதிவிறக்கம் செய்கிறார்கள்.
அதில் உள்ள செயலிகள் பல தனிப்பட்ட தகவல்களை திருடக்கூடும் என்பதாலும், ஹேக்கர்கள் சைபர் கிரைம் மோசடியில் ஈடுபடக்கூடும் என்பதாலும் கூகுள் நிறுவனம் அவ்வப்போது ஆபத்தான செயலிகளை நீக்கி வருகிறது.
மேலும், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் சில, தீம்பொருள் மற்றும் வைரஸ்களை தொலைபேசியில் கொண்டு வருகின்றன,
இதன் காரணமாக நீங்கள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். அந்த வகையில் இன்று ஆபத்தான 5 செயலிகளைப் பற்றி பார்க்கப் போகிறோம்.. அவை உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால், அவற்றை உடனடியாக நீக்குங்கள்.
Classic Emoji Keyboard : இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்தால், உங்கள் கீபோர்டின் வடிவமைப்பு மற்றும் தீம் போன்றவற்றை மாற்றுவதன் மூலம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய கீபோர்டு பயன்பாடாகும்.
ஆனால் இந்த பயன்பாடு மிகவும் ஆபத்தானது என்று கருதப்படுகிறது.. இது உங்கள் தனிப்பட்ட திருட சாத்தியக்கூறுகள் உள்ளதால் இதை உடனடியாக நீக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது..
Battery Charging Animation : இந்த செயலியின் மூலம், உங்கள் ஸ்மார்ட்போனுக்கான வால்பேப்பர்களை பதிவிறக்கம் செய்யலாம், இது வேகமாக சார்ஜ் செய்யும். இந்த செயலியில் தீங்கிழைக்கும் வைரஸ்கள் நிறைந்துள்ளது என்று கூறப்படுகிறது.. எனவே இந்த செயலியையும் நீங்கள் போனில் இருந்து நீக்க வேண்டும்..
Superhero Effect : இந்த செயலியின் மூலம், உங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு சூப்பர் ஹீரோ எஃபெக்ட்களை கொண்டு வரலாம். இந்த செயலி பாதுகாப்பானதாக கருதப்படவில்லை. இதன் மூலம் உங்கள் தகவல்கள் திருடப்படலாம் என்று கூறப்படுகிறது..
Volume Booster Louder Sound Equalizer : இந்த செயலியின் உதவியுடன் உங்கள் தொலைபேசியின் ஒலியளவை அதிகரிக்கலாம் மற்றும் தொலைபேசியின் திறனை விட சிறந்த ஒலி தரத்தைப் பெறலாம். ஆனால் இந்த செயலியால் தீங்கிழைக்கும் வைரஸ்கள் உங்கள் போனிற்குள் நுழையலாம்.. எனவே இந்த செயலியை உங்கள் மொபைலில் இருந்து உடனடியாக நீக்கவும்.
Emoji-One Keyboard : இந்த செயலியின் மூலம், சேட் செய்யும் போது வழக்கத்தை விட வித்தியாசமான எமோஜிகளை பெறுவீர்கள். இந்த பயன்பாடு பல பயனர்களை ஈர்க்கிறது. ஆனால் பாதுகாப்பானது அல்ல. இது தகவல்களை திருட வாய்ப்புள்ளதால் இதையும் உங்கள் போனில் இருந்து நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.