
சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. இவற்றைக் கண்டு நெட்டிசன்கள் தங்கள் மன அழுத்தங்களை மறந்து ரசித்து சிரிக்கின்றனர்.
சமீப காலங்களில் விலங்குகளுக்கு இடையில் நடக்கும் வேடிக்கையான வீடியோக்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வைரல் (Viral Video) ஆகி வருகிறது. இந்த வீடியோ ஒரு அழகான குரங்கு மற்றும் கிளி பற்றியது. இதில் குரங்கும் கிளியும் செய்யும் கியூட்டான செயல்கள் நம்மை மீண்டும் மீண்டும் வீடியோவை பார்க்க வைக்கின்றன.
இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களிலேயே இது ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.
சில விநாடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு அறையில் ஒருவர் தனது மடியில், ஒரு குரங்கையும் (Monkey) கிளியையும் வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. தனது எதிரில் அழகான கிளி அமர்ந்திருப்பதைப் பார்த்த குரங்கு, அதற்கு முத்தம் கொடுக்க முயல்கிறது.
ஆனால், முத்தம் குடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்காததால், குரங்கு கோபமடைந்து கிளியை (Parrot) கையால் அறைந்து விடுகிறது. சில நொடிகளில் குரங்கு பல முறை கிளியை அடித்து விடுகிறது.
வீடியோவில் இதற்குப் பிறகு வரும் காட்சி மிகவும் வேடிக்கையாக உள்ளது. கிளியும் குரங்கின் குறும்புகளால் கோபமடைந்து, பதிலுக்கு அதைக் குத்த ஆரம்பித்தது.
ஹெலிகாப்டர்யாத்ரா என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஆறாயிரத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன. பயனர்கள் இதற்கு விதவிதமான கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.