April 28, 2025, 8:44 AM
28.9 C
Chennai

உஷார்: QR code மூலம் ரூ.50000 மோசடி!

QR code
QR code

ஆன்லைனில் பணம் செலுத்தும்போது QR குறியீட்டை ஸ்கேன் செய்யும் போது கவனமாக இருக்கவும். இல்லாவிட்டால் ஏமாற்றப்படலாம்.

இன்றைய ஆன்லைன் உலகில் மிகச்சிறிய பேமெண்டைக் கூட ஆன்லைனில் செலுத்துவது வழக்கமாகிவிட்டது. ஆனால், அதிலும் சிக்கல்கள் அதிகமாகத்தான் இருக்கிறது. எனவே கவனமாக செயல்படுங்கள் என்று உணர்த்தும் சம்பவம் இது.

ஆன்லைனில் பணம் செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்.

OLX (Online Payment) பண செலுத்தும் முறையில் மோசடிகள் தொடர்பான பல செய்திகள் தொடர்ந்து வெளிவருகின்றன. இதுதொடர்பாக அந்த நிறுவனம் பல நடவடிக்கைகளையும், தொழில்நுட்ப மேம்படுத்துதலையும் செய்து வருகிறது.

ஆன்லைன் மோசடி தொடர்பான அறிவிப்புகளையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இதேபோல், UPI ஆப்ஸில், பயனர்கள் QR குறியீடு ஸ்கேன் செய்யும்போது, ​​UPI பின்னை உள்ளிட்ட பிறகுதான் உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

இன்றைய தொழில்நுட்ப சகாப்தத்தில் UPI மூலம் பணம் செலுத்துவது சுலபமாக இருக்கிறது. அதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும்,

மோசடி செய்பவர்கள் புதிய வழியையும் கண்டுபிடித்து விடுகின்றனர். கியூஆர் குறியீட்டின் உதவியுடன், 50,000 ரூபாயை மோசடி செய்த சம்பவம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சைபர் குற்றவாளிகள் OLX மற்றும் பிற வகைப்படுத்தப்பட்ட தளங்களின் உதவியுடன் ஆன்லைன் மோசடி செய்கிறார்கள். QR குறியீடு ஸ்கேன் செய்து பணம் அனுப்பும்போது, மோசடி செய்து, வேறு ஒரு கணக்கிற்குக் பணம் சென்றது.

பொதுவாக ஒரு பொருளை வாங்கும்போது, UPI செயலி மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து பின்னை உள்ளிடும்போது, ​​பொருளுக்கான கட்டணம் செலுத்தப்படும்.

உண்மையில், மோசடி செய்பவர்கள் (Money Fraud) நீங்கள் அந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்து, பின் எண்ணை உள்ளிட்டவுடன், உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்பட்டு, மோசடி செய்பவர்களின் கணக்கைச் சென்றடையும் வகையில் தொழில்நுட்பத்தை மாற்றி அமைக்கின்றனர்.

இதுமட்டுமின்றி, QR குறியீட்டின் கீழே உள்ள உரையைத் திருத்துவதன் மூலமும் மோசடி செய்பவர்கள் நாம் செலுத்தும் தொகையை மாற்றலாம் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  எடப்பாடி தலைமையிலான அதிமுக., குழு தில்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு!

சமீபத்தில் ஒரு பயனர் 10,000 ரூபாய் பரிவர்த்தனைக்காக, QR குறியீட்டை ஸ்கேன் செய்து UPI பின்னை (UPI Pin) உள்ளிட்டார். அதன் பிறகு அவரது கணக்கில் இருந்து 50,000 ரூபாய் சென்றுவிட்டது.

மோசடியாளர்கள் இந்த வகையான QR குறியீட்டை பொது இடத்தில் மற்ற குறியீடுகளுக்கு மேல் வைத்திருப்பதாகவும், இதன் காரணமாக உங்கள் பணம் கடைக்காரருக்கு செல்வதற்கு பதிலாக மோசடியாளர்களுக்கு சென்றுவிட்டது.

QR குறியீடு மோசடியை எவ்வாறு தவிர்ப்பது?

உங்களுக்கு பணம் வருவதாக இருந்தால், அதற்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்யவோ அல்லது UPI பின்னை உள்ளிடவோ தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவும்.

QR குறியீட்டின் மூலம் நீங்கள் யாருக்காவது பணம் செலுத்துகிறீர்கள் என்றால், UPI பின்னை உள்ளிடுவதற்கு முன், பணம் பெறுபவரின் பெயரைச் சரிபார்க்கவும்.

யாரேனும் தெரியாத நபர் கொடுத்த QR குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டாம்.

OLX அல்லது வேறு எந்த தளத்திலும் உங்களைத் தொடர்புகொள்பவரை நம்ப வேண்டாம். தொடர்பு கொள்பவரின் விவரங்களை சரிபார்க்கவும்.

ALSO READ:  அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories