மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய சர்பேஸ் கோ 3 மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 10.25 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிக்ஸ்டாண்டு, 10-ம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், சர்பேஸ் பென் வசதி, விண்டோஸ் 11 ஓ.எஸ்.வழங்கப்பட்டு இருக்கிறது.
உயர் தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளேயுடன், இந்த லேப்டாப் 16: 9 ரேஷியோ , இன்டெல் செலரியன் செயலி மற்றும் புதிய விண்டோஸ் 11 SE ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Windows 11 SE ஐப் பொறுத்தவரை, குறைந்த விலை சாதனத்தில் உள்ள வளங்களை மேம்படுத்துவதன் மூலம் OS செயல்திறனை மேம்படுத்த இது உதவும் என்று நிறுவனம் கூறுகிறது.
லேப்டாப் 1366×768 பிக்சல்கள் ரெஸலுசன் கொண்ட 11.6 இன்ச் ஹை ரெஸலுசன் கொண்ட ஸ்க்ரீனை கொண்டுள்ளது. 8ஜிபி வரை DDR4 ரேம் மற்றும் 128ஜிபி வரை eMMC ஸ்டோரேஜும் உள்ளது.
லேப்டாப்பில் பாதுகாப்புக்காக TPM 2.0 சிப் கொடுக்கப்பட்டுள்ளது. ஆடியோவிற்கு, லேப்டாப்பில் 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன.
544 கிராம் எடை கொண்டிருக்கும் புதிய சர்பேஸ் கோ 3 8.3 எம்.எம். அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் இன்டெல் யு.ஹெச்.டி. கிராபிக்ஸ் 615, 4 ஜிபி அல்லது 8 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி அல்லது 128 ஜிபி எஸ்.எஸ்.டி., வைபை 6 மற்றும் ப்ளூடூத் 5 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிய சர்பேஸ் கோ 3 4 ஜிபி ரேம், 64 ஜிபி இ.எம்.எம்.சி. ஸ்டோரேஜ் மாடல் விலை ரூ. 42,999 என துவங்குகிறது.
இன்டெல் கோர் ஐ3, 8 ஜிபி ரேம், 128 ஜிபி எஸ்.எஸ்.டி. கொண்ட மாடலின் விலை ரூ. 62,999 ஆகும். இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நவம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. தற்போது இதற்கான முன்பதிவு துவங்கி இருக்கிறது.