
இன்று தொழில்நுட்பத்தின் வளர்ச்சியினால் எல்லா வகையான பொருட்களையும் ஆன்லைன் மூலம் நம்மால் வாங்கி குவித்து விட முடியும். அதுவும் நாம் வாங்கும் எல்லா பொருட்களுக்கும் தள்ளுபடியையும் பெற முடிகிறது. இதற்காகவே பலர் ஆன்லைனில் ஷாப்பிங் செய்கின்றனர்.
குறிப்பாக பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக பலர் தவறான வெப்சைட்களில் சென்று தங்களது பணத்தை இழந்த கதைகளையும் கேட்டிருப்போம்.
பாதுகாப்பான முறையில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்ய வேண்டுமென்றால் இந்த 5 விஷயங்களை அவசியம் நீங்கள் கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
உண்மைத் தன்மை : ஏராளமான தள்ளுபடிகள் உள்ளதே என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு உங்களின் பணத்தை போலியான வெப்சைட்களில் கொட்டி விடாதீர்கள்.

நீங்கள் ஷாப்பிங் செய்கின்ற வெப்சைட் உண்மையானதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் உங்களின் இமெயில் மற்றும் சமூக ஊடங்கங்களில் வருகின்ற ப்ரொமோஷனல் லிங்க்கை கிளிக் செய்யாதீர்கள். அவற்றில் பல, போலியான வெப்சைட்கள் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இணையதளத்தின் டொமைன் : மிக பெரிய தள்ளுபடி போடப்படும் நாட்களில் ஹேக்கர்கள் நம்மை ஏமாற்றுவதற்காக காத்திருப்பார்கள்.
அசல் வெப்சைட்டை போன்றே போலியான ஒன்றை தயார் செய்திருப்பார்கள். நீங்கள் ஷாப்பிங் செய்யும் வெப்சைட்டின் பெயரில் எதாவது எழுத்துப்பிழை உள்ளதா என கவனித்து பாருங்கள்.
மேலும் அறிமுகம் இல்லாத இமெயில்கள் மற்றும் இதுவரை கேள்விப்படாத முகவரியை கொண்ட இமெயில்களை தவிர்த்திடுங்கள்.
அதிரடி தள்ளுபடி : நீங்கள் வாங்கும் பொருட்களில் அளவுக்கு அதிகமான தள்ளுபடியை தருகிறார்கள் என்றால் சற்று யோசிக்க வேண்டும்.
உதாரணமாக புதிய ஐபோன் அல்லது ஐபேடு போன்றவற்றிற்கு 80% தள்ளுபடி என்று சொன்னால் அதை நம்பாதீர்கள். இது போன்ற போலி தள்ளுபடியை பெறும்போது மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
போலியான வெப்சைட் : நீங்கள் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது அந்த வெப்சைட் போலியானதா அல்லது பாதுகாப்பானதா என்பதை அறிய “https” என்பது, எந்த வெப்சைட்டின் யூ.ஆர்.எல்-இல் இருக்க வேண்டும். இதில் “http” மட்டும் இருந்தால் அது பாதுகாப்பான வெப்சைட் கிடையாது என்று அர்த்தம்.
இதை மிக எளிதாக கண்டறிய அதன் முன்பகுதியில் பூட்டு போட்ட ஐகான் ஒன்று இருக்கும். வெப்சைட்டின் யூ.ஆர்.எல்-இல் இது இருந்தாலே போதும்.
பாஸ்வேர்டு ரீசெட் : உங்களின் பாஸ்வேர்ட்டை ரீசெட் செய்யும்போது அந்த குறிப்பிட்ட வெப்சைட்டில் இருந்து நீங்கள் பெறும் வெரிஃபிகேஷன் லிங்க் சரியானதாக என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
குறிப்பாக நவம்பர் மாதத்தில் எண்ணற்ற தள்ளுபடியை பல வெப்சைட்கள் அறிவிக்கும். அந்த நேரத்தில் நீங்கள் பாஸ்வேர்டு ரீசெட் செய்யும்போது, உங்களுக்கு வருகின்ற லிங்க் அந்த குறிப்பிட்ட வெப்சைட் மூலம் வந்ததா என சரிபார்த்து கொள்ளவும். அதன் பின்னரே அந்த லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.