ஹேமமாலினியை தன் படத்திற்கு புக் செய்ய இயக்குனர் பாலா ஆவல்!

Published:

hemamalini dharmendra
hemamalini dharmendra

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாலா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

ஏற்கனவே நந்தா பிதாமகன்ஆகிய படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய இவர்கள் இருவரும் 3-வது முறையாக இணையும் இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இந்த படத்தில் சூர்யா வயதான தோற்றத்தில் முதியவராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகை ஹேமமாலினியை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது. இந்த படத்தில், ஒரு கனமான பெண் கதாபாத்திரம் உள்ளது.

madhura mp hemamalini
madhura mp hemamalini

அதில் ஹேமமாலினி நடித்தால் பொருத்தமாக இருக்கும் பாலா யோசித்ததால, ஹேமமாலினியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

ஹேமமாலினி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர். அவர் முதன் முதலாக தமிழ் படத்தில் நடிக்க முயற்சி செய்தார். அவருக்கு சினிமாவுக்கு ஏற்ற முகமல்ல என்று அவரை தமிழ் பட டைரக்டர்கள் புறந்தள்ளினர்.

அதன்பிறகு ஹேமமாலினி இந்தி பட உலகுக்கு சென்று பிரபல கதாநாயகி ஆனார். இந்திய அளவில் ரசிகர்களின் கனவுகன்னியாக திகழ்ந்தார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
bala
bala

பிரபல இந்தி நடிகர் தர்மேந்திராவை காதல் திருமணம் செய்துகொண்டு 2 மகள்களுக்கு தாயானார். தற்போது அரசியலிலும் பிரபலமாகி வருகிறார். பின்னர் கமலின் ஹேராம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் அவரை மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க வைக்க டைரக்டர் பாலா முயற்சி செய்கிறார். சூர்யா ஜோடியாக தமிழ் படத்தில் நடிக்க ஹேமமாலினியும் விருப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது

Related articles

Recent articles

spot_img