பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி: பள்ளி கல்வித்துறை!

அடடே... அப்படியா? கல்வி சற்றுமுன் தமிழகம்
school
school

பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

விபத்தில் இறந்த தாய் அல்லது தந்தை உள்ளிட்ட பெற்றோரை இழந்தவர்கள், நிரந்தர முடக்கம் அடைந்தமையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு ரூ.75,000 நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

மேலும், இந்த உதவித்தொகையை பெறுவதற்கு மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும், இத்திட்டத்தில் பயனடையும் மாணவ, மாணவியர் தற்போது வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டு கல்வி பயின்றால், தற்போது பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் அதற்கான படிவத்தை பெற்றும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.