
சமூக வலைதங்களில் வெளியான ஒரு நியூஸ் பேப்பர் கட்டிங் தற்போது வைரலாக பரவி வருகிறது. தான் திருமணம் செய்து கொள்ளப் போகின்ற பெண் அடிக்கடி வெளியே அசைவம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்று தெரிந்த மணமகன் அவரிடம் ஒரு சத்தியம் வாங்கியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு அசைவம் சாப்பிட கூடாது என்று. பெண்ணும் சத்தியம் செய்து கொடுக்க திருமணமும் முடிந்து விட்டது. ஆனால் அதன் பின்னரும் ரகசியமாக தனக்கு பிடித்த உணவை உட்கொண்டு வந்துள்ளார்.
இதனை அறிந்து ரத்த கொதிப்பிற்கு ஆளான கணவர் நானா அல்லது இந்த மட்டனா இரண்டில் ஏதாவது ஒன்றைத் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த இந்த பதிவிற்கு பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
பத்திரிக்கைக்கு இதனை எழுதிய கணவர் தன் மனைவி மட்டன் தான் முக்கியம் என்று சென்றுவிடுவாரோ என்ற பயம் இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள காலம்னிஸ்ட், வாழ்க்கையில் ஆண் – பெண் – ஆடு என்ற முக்கோண காதல் கதையை முதன்முறையாக கேட்கின்றேன் என்று கூறிப்பிட்டுள்ளார்.