December 5, 2025, 10:47 AM
26.3 C
Chennai

இரும்புப் பெண்மணி ஜெயலலிதா நினைவு நாளில்..!

jayalalithaa 1 1
jayalalithaa 1 1

இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவு நாள் இன்று:

தமிழகத்தின் முதல் பெண் எதிர்கட்சித்தலைவர்; நாடாளுமன்ற உறுப்பினர், 6 முறை முதலமைச்சர் என தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக உலா வந்தார் ஜெயலலிதா.

உடல் நலக்குறைவால் 2016-ம் ஆண்டு இதே நாளில் உயிரிழந்தார்.

இவரின், 5 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

திரையுலகில் தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிரபலமான ஜெயலலிதா, மொத்தம் 115 படங்களில் நடித்துள்ளார்.

இதில், எம்.ஜி.ஆர்-வுடன் மட்டும் 28 படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் கோலோச்சிய ஜெயலலிதா 1982-ல் அரசியலில் தடம் பதித்தார்.

modi jayalalitha
modi jayalalitha

இதையடுத்து, 1983-ல் அவரை அதிமுக-வின் கொள்கை பரப்புச் செயலாளராக நியமித்து அழகுபார்த்தார் எம்.ஜி.ஆர்.

1984-ல் மாநிலங்களவைக்கு தேர்வானதன் மூலம் தமிழகத்தின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

பின்னர், 1989 சட்டப் பேரவை தேர்தலில் போடிநாயக்கர் தொகுதியில் போட்டியிட்டு முதல்முறை எம்.எல்.ஏ- ஆனார்.

அத்துடன், தமிழக சட்டப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார்.

jayalalitha karunanidhi
jayalalitha karunanidhi

இதையடுத்து, 1991-ல் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கவே, முதல்முறை முதலமைச்சராக பதவியேற்றார்.

முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொந்து குவித்ததாக கூறி, 1996 ஜூன் 14-ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதுவே, அவரின் அரசியல் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் சறுக்கலையும், சிக்கலையும் ஏற்படுத்தியது.

இருப்பினும், தொடர்ந்து தமிழக அரசியலில் இரும்பு பெண்மணியாக விளங்கினார்.

2014 மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 38-ல் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக செயல்பட்டது.

மேலும், 2016- சட்டப் பேரவை பொதுத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றிபெற்று, தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியமைத்து சாதனை படைத்தது.

அத்துடன், 6-வது முறை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டார் ஜெயலலிதா.

உடல் நலக்குறைவால் 2016 செப்டம்பர் 23-ம் தேதி சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், 74 நாட்கள் தொடர்ந்து உயர் சிகிச்சை அளித்த போதும், சிகிச்சை பலனின்றி 2016 டிசம்பர் 5-ம் தேதி தனது 68-வது வயதில் ஜெயலலிதா மரணமடைந்தார்.

இந்நிலையில், இவரின் 5 ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

jayalalitha memories - 2025

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 5-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய மன்னாடிமங்கலம் அம்மா பேரவை சார்பாக, ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அம்மா பேரவை செயலாளர் ராஜபாண்டி, மூத்தவர் பேச்சிமுத்து, போத்துராஜா மகளிரணி விஜயா சந்திரா உள்ளிட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.

jayalalitha death anniversary day - 2025

அலங்காநல்லூரில் ஜெயலலிதா நினைவு நாள்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கேட்டு கடை பகுதியில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான, ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி ,அவரது திருவுருவப் படத்திற்கு முன்னாள் சேர்மன் ஆர்எஸ் ராம்குமார் தலைமையில் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் பாலாஜி தெய்வம், மன்னார்குடி மகாராசன், கோடங்கிபட்டி அழகுமலை, முடுவார்பட்டி ஜெயசந்திர மணியம் ஆகியோர் முன்னிலையில், அவரது, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், ஊராட்சி மன்றத் தலைவர்கள் கல்லணை சேது சீனிவாசன, வாவிடமருதூர் திருநாவுக்கரசர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்வேலி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தலைவர் கோட்டைமேடு சரவணன், விவசாய அணி குமார் சின்ன பாண்டி, தண்டலை ஆனந்த், ஏர்ரம்பட்டி
மதன், புதுப்பட்டி பாண்டுரங்கன் உள்பட அ.தி.மு.க நிர்வாகிகள் கலநது கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories