To Read it in other Indian languages…

Home அடடே... அப்படியா? பறவைக் கூட்டில் பத்திரிகை: வைரலான வித்தியாச அழைப்பிதழ்!

பறவைக் கூட்டில் பத்திரிகை: வைரலான வித்தியாச அழைப்பிதழ்!

Bird nest1 - Dhinasari Tamil

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவபாய் ராஜிபாய் கோஹில். இவரது மகன் ஜெயேஷ் .

இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பலரும் தங்கள் திருமண நாளில் ஏதேனும் வித்யாசமாக செய்ய நினைத்து அந்நாளை என்றும் மனதில் இருந்து நீங்கா நாளாக வைக்க எண்ணுகின்றனர்.

அதற்காக வித்யாசமாக புகைப்படம் எடுத்தல் , இணையத்தில் லைவ்வாக ஒளிபரப்புதல் என வித்யாசமாக திருமணத்தில் ஏதாவது செய்கின்றனர்.

இதே போன்று மகனின் திருமணத்தில் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று சிவபாய் எண்ணியுள்ளார்.

திருமணத்தில் விருந்தினர்களை அழைக்க வைக்கப்படும் பத்திரிக்கையில் சற்று வித்யாசமாக பறவைகளின் கூடு போன்று வைத்து அழைப்பிதழை அனைவருக்கும் வைத்து திருமணத்திற்கு அழைக்க முடிவு செய்துள்ளார்.

Sparrows Nest - Dhinasari Tamil

இது குறித்து தன் மகனிடம் கலந்தாலோசித்து இருவரும் இணைந்து திருமண அழைப்பிதழை பறவைகளின் கூடு போன்று தயார் செய்து விருந்தினர்களுக்கு தங்கள் திருமணத்திற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து தந்தையும், மகனும் தெரிவிக்கையில், நாம் மற்றவருக்கு ஏதாவது கொடுத்தால் அதன் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் இது போன்று சிந்தித்தோம்.

எங்கள் வீட்டில் பறவைகளுக்காக கூடு வைத்துள்ளோம். எங்களுக்கு பறவைகள் என்றால் அலாதி பிரியம் என கூறியுள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × five =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.