
இந்தியாவில் சனிக்கிழமை 1.03 கோடி டோஸ்கள் போடப்பட்டன… இதன் மூலம், நம் நாட்டில் 6 வது முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான பேருக்கு தடுப்பூசி போடப் பட்டு சாதனை செய்யப் பட்டுள்ளது.
இந்தியாவில் 50 சதவீதம் பேர் இரு தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர், தடுப்பூசி போட தகுதியுடையவர்களில் இந்தியாவில் பாதி பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர். 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி…. 50.35 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்தி கொண்டனர்… என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது!
நாட்டில் ஆறாம் முறையாக ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசி நேற்று செலுத்தப்பட்டது. ஒட்டுமொத்த டோஸ் எண்ணிக்கை 127.54 கோடியை கடந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி பணிகளை மத்திய – மாநில அரசுகள் விரைவுபடுத்தி உள்ளன. பின்தங்கிய சில வட மாநிலங்களில் பணிகளை துரிதப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது. இதனால் பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக தடுப்பூசி பணிகள் வேகம் எடுத்துள்ளன.
இதற்கிடையே, உருமாறிய ஒமைக்ரான் கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் தடுப்பூசியை தேடி வந்து பெறுகின்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, இரவு 8:00 மணிக்கு ஒரு கோடியை கடந்தது; எண்ணிக்கை மேலும் உயரும் என தெரிகிறது.
நாட்டில் தடுப்பூசிப் பணிகள் ஜன.16ல் தொடங்கின. முதல் முறையாக தடுப்பூசி செலுத்தப்படும் அளவு, ஆக. 27ல் ஒரு கோடியை கடந்தது.ஆக.31, செப்.6, செப்.27 ஆகிய தேதிகளிலும் ஒரு நாள் செலுத்திய டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான செப்.17ம் தேதி 2.5 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு சாதனை படைக்கப் பட்டது.
தடுப்பூசி டோஸ் ஒரே நாளில் ஒரு கோடியை ஆறாம் முறையாக நேற்று கடந்தது. இதுவரை 127.54 கோடிக்கும் அதிகமான டோஸ் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.