December 6, 2025, 7:23 AM
23.8 C
Chennai

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி: சிறப்பம்சங்கள்..!

Zero 5G - 2025

இன்பினிக்ஸ்-ன் முதல் 5ஜி ஃபோனான ஜீரோ 5ஜி ரெண்டர்கள் வடிவமைப்பை வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, டைமன்சிட்டி 900 எஸ்ஓசி சிப்செட் உடன் வரும் என கூறப்படுகிறது.

ரியல்மி, போக்கோ மற்றும் சாம்சங் போன்ற பிராண்டுகள் முன்னதாகவே 5ஜி இணைப்புடன் கூடிய பல ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளன.

இந்தியாவில் 5ஜி இணைப்புக்கான கால அவகாசம் 2022-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் டெக்னோ போவா 5ஜி என்று அழைக்கப்படும் 5ஜி இயக்கப்பட்ட சாதனத்தை டெக்னோ விரைவில் அறிமுகப்படுத்தும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இன்பினிக்ஸ் அதன் முதல் 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி என்று அழைக்கப்படும் எனவும் புதிய தகவல்களாக இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ரெண்டர்கள் வடிவமைப்பையும் பகிர்ந்துள்ளது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. யூடியூபர் டெக் அரீனா 21 மூலமாக சமீபத்திய மேம்பாடு வெளி வருகிறது. அதில் டெக்னோ போவா 5ஜி-ன் ரெண்டர்களை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

வடிவமைப்பை பொறுத்தவரை, இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஆனது செல்பி கேமரா சென்சாரை வைக்க முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட்டை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதன் பின்புறத்தில் இரண்டு எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடன் மூன்று கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது.

கேமரா தொகுதியை பொறுத்தவரையில், இது ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்3 ப்ரோ போன்றே இருக்கும் என கூறப்படுகிறது. பின்புற பேனலில் கைரேகை ஸ்கேனர் இல்லை என்பதை தெளிவுப்படுத்தியதை அடுத்து இந்த ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை அல்லது இன் டிஸ்ப்ளே ஸ்கேனர் வரும் என கூறப்படுகிறது.

அதேபோல் வால்யூம் பட்டன்கள் சாதனத்தின் வலது விளிம்பில் காணப்படுகின்றன, ரெண்டர் தகவலில் மொபைல் அடர் ப்ளூ வண்ணத்தில் காட்டப்படுகின்றன.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி குறித்த விவரங்களை யூடியூபர் வெளியிடவில்லை. முன்னதாக ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் எனவும் இது அமோலெட் பேனல் உடன் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூட்டின் கீழ் இது மீடியாடெக் டைமன்சிட்டி 900 சிப் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இது டெக்னோ போவா 5ஜி-க்கு சக்தி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயத்தில் கேமரா சென்சார்கள், பேட்டரி திறன் மற்றும் டிஸ்ப்ளே விவரங்கள் போன்ற அம்சங்களை நிறுவனம் இன்னும் வெளியிடப்படவில்லை, பிராண்ட் மேலும் விவரங்களை வரும் நாட்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது வரவிருக்கும் டெக்னோ போவா 5ஜி உடன் நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு சாதனங்களும் மீடியாடெக் டைமன்சிட்டி 900 செயலி மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி ஸ்மார்ட்போனானது எஸ் அமோலெட் பேனல் கொண்டிருப்பது கூடுதல் அம்சமாக இருக்கும். டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது ஐபிஎஸ் எல்சிடி பேனலை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

வரவிருக்கும் டெக்னோ போவா 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.20,000 மற்றும் ரூ.22,000 என்ற விலைப்பிரிவில் இருக்கும் என கூறப்படுகிறது. இன்பினிக்ஸ் ஜீரோ 5ஜி விலை தற்போது வரை தெளிப்படுத்தவில்லை. ரூ.25,000 விலைப்பிரிவில் இது இடைப்பட்ட சாதனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்பினிக்ஸ் அதன் வரவிருக்கும் 5ஜி சாதனம் குறித்து எந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இன்பினிக்ஸ் நோட் 11 தொடர் ஸ்மார்ட்போன்களில் நோட் 11, நோட் 11 ப்ரோ மற்றும் நோட் 11 எஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது.

அதேபோல் இன்புக் எக்ஸ்1 மடிக்கணினியை டிசம்பர் மாதம் நாட்டில் அறிமுகம் செய்ய பிராண்ட் தயாராகி வருகிறது. இந்த சாதனம் நாட்டில் பிளிப்கார்ட் மூலமாக கிடைக்கும் என கூறப்பட்டாலும் இதன் வெளியீட்டு தேதி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. நோட் 11, 11 ப்ரோ மற்றும் இன்புக் எக்ஸ்1 லேப்டாப் உடன் இது வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இன்பினிக்ஸ் அதன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட நோட் 11 தொடரில் நோட் 11 எஸ் என்ற ஸ்மார்ட்போனை இணைத்துள்ளது.

தற்போது இந்தியாவில் நோட் 11 எஸ் வெளியீட்டை பீராண்ட் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் அடுத்த மாதம் இன்புக் எக்ஸ்1 மடிக்கணினியுடன் நோட் 11 மற்றும் நோட் 11 ப்ரோ ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது வெளியீட்டு நிகழ்வு நோட் 11 எஸ் அறிகுறியாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இன்பினிக்ஸ் நோட் 11எஸ் இந்திய வெளியீடு அதிகாரப்பூர்வமாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் இன்பினிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அனிஷ் கபூர் டீஸ் செய்துள்ளார்.

அவர் வரவிருக்கும் நோட் 11 ஸ்மார்ட்போனின் பாக்ஸை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருப்பினும் சரியான வெளியீட்டு தேதியை நிறுவனம் குறிப்பிடப்படவில்லை, இருப்பினும் டிசம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்ட அதே நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் இணையும் என கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் குறித்து பார்க்கையில் இது 50 மெகாபிக்சல் மெயில் லென்ஸ் மற்றும் இரட்டை 2 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் டெப்த் சென்சார்களை உள்ளடக்கிய குவாட் எல்இடி ஃபிளாஷ் உடன் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories