
தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வானது டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தனித் தேர்வர்களுக்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.
ஆனால், தொடர் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பொதுத் தேர்வு டிசம்பர் 20 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் வருகிற டிசம்பர் 14 முதல் தேர்வர்கள் தங்களது தேர்வுக்கான நுழைவுச் சீட்டை http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.