நாசாவின் எதிர்கால விண்வெளி பயணம்: இந்திய வம்சாவளியை சேர்ந்த விமானப்படை டாக்டர் தேர்வு!

Anil Menon - 2026

நாசாவின் எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் அமெரிக்க விமானப்படையில் பணியாற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டரும் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ தரப்பிலிருந்து எதிர்கால விண்வெளி பயணங்களுக்கான அடுத்தகட்ட பணிகள் நடந்து வருகிறது.

இதற்கான வின்வெளி வீரர்களை தேர்வு செய்யும் பணி சமீபத்தில் நடைபெற்றது. இதற்கு, தங்களை தேர்வு செய்ய வேண்டும் என அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

அவர்களில் முதற்கட்டமாக 10 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விமானப்படை வீரரும், டாக்டருமான லெப்டினன்ட் கர்னல் அனில் மேனன், 45, என்பவரும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்து உள்ளது.

விண்வெளிக்கு பயணிக்கும் விமானப்படையை சேர்ந்த முதல் டாக்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாசாவின் ‘ஸ்பேஸ் எக்ஸ் டெமோ- – 2’ பணிகளின்போது, விண்வெளிக்கு ஆட்களை அனுப்புவதில் உதவிய அனில் மேனன், தற்போது அமெரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தவும், விண்வெளியில் மனித குலத்தின் நலனுக்காக பணியாற்றவும் தேர்வாகி இருப்பதாக நாசா அறிவித்துள்ளது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

புதிதாக தேர்வு செய்யப்பட்டோருக்கான பயிற்சிகளின் தொடக்கவிழா ஹூஸ்டனில் ஜான்சன் விண்வெளி மையம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதில் அனில் மேனன் உள்ளிட்ட 10 பேரையும் நாசா நிர்வாகி பில் நெல்சன் அறிமுகப்படுத்தினார். அவர் கூறும்போது, ”இவர்கள் ஒவ்வொருவரிடமும் பல்வேறு தனித்துவமான அடையாளங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மறந்து, அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டின் லட்சித்திற்காக பாடுபடுவார்கள்,” என்றார்.

இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோர் ஏற்கனவே விண்வெளிக்கு பயணித்து இருந்தனர்.

இந்நிலையில் ஜூலை மாதம் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியர் சிரிஷா பண்ட்லா, விண்வெளிக்கு பயணித்த இந்திய வம்சாவளியை சேர்ந்த மூன்றாவது பெண் என்ற பெருமையை பெற்றார்.

முன்னாள் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா விண்வெளியில் பயணம் செய்த ஒரே இந்திய குடிமகன் ஆவார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories