spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?அதிரடி சலுகையில் விலையுயர்ந்த போன்கள்!

அதிரடி சலுகையில் விலையுயர்ந்த போன்கள்!

- Advertisement -
Infinix Hot 10 Play Smartphone

இந்தியாவில் பின்புற இரட்டை கேமராக்கள், வேகமான சார்ஜிங் ஆதரவு மற்றும் பெரிய டிஸ்பிளே போன்ற கண்கவர் அம்சங்களை கொண்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இருப்பினும் அவற்றின் 10,000 ரூபாய்க்கு கீழ் உள்ள பட்ஜெட் ஃபோன்கள் எதுவும் இதுவரை 5Gயை ஆதரிக்கவில்லை. இருப்பினும், இந்த நுழைவு நிலை ஸ்மார்ட்போன்களின் தேவையும் மக்களிடையே அதிகரித்தது.

ஏனெனில் வேலை மற்றும் ஆன்லைன் வகுப்புகள் என நாடு முழுவதும் பலர் இன்னும் வீட்டிலிருந்து பணிபுரிந்து வருகின்றனர்.

அந்த வகையில் நீங்கள் வாங்கக்கூடிய சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் குறித்து பின்வருமாறு விரிவாக காணலாம்.

நோக்கியா சி 20 பிளஸ் ஸ்மார்ட்ஃபோன் 6.5 அங்குல டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதன் எடை 204 கிராம் என்பதால் சிலருக்கு இது அதிக எடையுள்ளதாகத் தோன்றலாம்.

சார்ஜ் செய்வதற்கு இதனுடன் மைக்ரோ-யூ.எஸ்.பி போர்ட்டைப் பெறலாம். மேலும் இதனுடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜுடன் வருகிறது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் Android Go மூலம் இயங்குகிறது. அதாவது குறைந்தபட்ச ப்ளோட்வேர் மூலம் டோன்ட்-டவுன் பயன்பாடுகளை நீங்கள் அனுபவிக்க முடியும்.

இரட்டை கேமரா அமைப்பில் 8 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில், 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்தியாவில் இதன் விலை 8,999 ரூபாயில் தொடங்குகிறது.

நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களைப் போலவே, மோட்டோரோலாவும் சுத்தமான ஆண்ட்ராய்டு அனுபவத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

இந்த போன் 6.5 அங்குல ஸ்க்ரீனைக் கொண்டுள்ளது. மேலும் போனின் பக்கவாட்டில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் உள்ளது.

கைரேகை ஸ்கேனருக்கு மேலே இரட்டை கேமரா அமைப்பை மோட்டோரோலா தேர்வு செய்துள்ளது. கேமரா அமைப்பில் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் கேமராக்கள் மற்றும் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் ஷூட்டர் ஆகியவை அடங்கும்.

அதேபோல இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 SoC, மைக்ரோ-USB போர்ட் வழியாக சார்ஜ் செய்யும் ஒரு பெரிய 5,000mAh பேட்டரி மற்றும் 4GB ரேம் வரை கிடைக்கும். இது 8,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் இந்தியாவில் மிகவும் நம்பகமான பிராண்டுகளில் ஒன்றாகும். மேலும் இந்நிறுவனம் நாட்டில் ஒரு நல்ல சந்தைப் பங்கைப் பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் Galaxy F02s என்ற நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த போன் மூன்று பின்புற கேமராக்களுடன் வருகிறது. இது ஒரு பெரிய 5,000mAh பேட்டரியுடன் வருகிறது. இது USB Type-C போர்ட் வழியாக 15W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. 6.5-இன்ச் HD+ இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 450 SoC, 4ஜிபி வரை ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆகியவை உள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,499 ஆகும்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், Realme அதன் பட்ஜெட் Narzo சீரிஸை புதுப்பித்து வெளியிட்டது. அதன்படி, Realme Narzo 30A ஆனது அதன் வரிசையில் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் ஆகும்.

6,000mAh பேட்டரியை கொண்டிருக்கும் போன்களின் பட்டியலில் உள்ள ஒரே தொலைபேசி இதுவாகும்.

அதிர்ஷ்டவசமாக, பெரிய பேட்டரி யூனிட் USB Type-C போர்ட் வழியாக 18W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது. பின்புறத்தில்13 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

முன்புறத்தில், செல்ஃபிக்களுக்காக 8 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது. மேலும் இந்த போன் 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் ஆக்டா-கோர் MediaTek Helio G85 சிப்செட் உள்ளது. இந்தியாவில் இதன் விலை 8,999 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

Infinix Hot 11S ஸ்மார்ட்போன் ​​அதன் பட்ஜெட்டுக்கு சிறந்த செயல்திறன் கொண்டதாக அமைந்துள்ளது. இது 6.78-இன்ச் ஸ்க்ரீனை கொண்டுள்ளது.

MediaTek Helio G88, 5,000mAh பேட்டரி மற்றும் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா உள்ளது. ஃபோனின் விலை ரூ. 10,999 ஆனால் வாடிக்கையாளர்கள் வங்கிச் சலுகைகள் மூலம் விலையைக் குறைத்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe