ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு பி.எப். சந்தாதாரர்களின் இ-நாமினேஷனுக்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது.
டிசம்பர் 31 க்குப் பிறகு நியமன வசதி கிடைக்கும் என்று இ.பி.எப்.ஓ. ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
அதில், இபிஎப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31க்குப் பிறகும் இ-நாமினேஷன் வசதி மூலம் வாரிசுதாரர்களை சேர்க்க முடியும் என்று கூறியுள்ளது.
முன்னதாக டிசம்பர் 31ம் தேதிக்குள் மின்னனு பரிந்துரையை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, பலரால் பரிந்துரைக்கப்பட்டவரின் விவரங்களைச் சேர்க்க முடியவில்லை.
இ-நாமினேஷன் வசதி பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவதற்கும், ஊழியர்களின் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறுவதற்கும் கட்டாயமாக்கப்பட்டது.
மேலும், அனைத்து சேவைகளையும் ஆன்லைனில் மாற்றுவதன் ஒரு பகுதியாக இ-நாமினேஷன் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆன்லைனில் நாமினேஷன் செய்வது எப்படி?
- EPFO இணையதளத்தில் உள்ள services பகுதியில் For Employees பகுதியில் உள்ள Member UAN/Online Service பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.
- UAN எண் மற்றும் Password வைத்து உள்ளே நுழையவும்.
- Manage பகுதிக்கு கீழ் உள்ள E-Nomination பிரிவை கிளிக் செய்யவும்.
- Provide Details பக்கம் இப்போது திறக்கு. அதில் save பட்டனை கிளிக் செய்யவும்.
- Yes பட்டனை கிளிக் செய்யவும்.
- Add family details பட்டனை கிளிக் செய்யவும்.
- Nomination details பட்டனை கிளிக் செய்து Save EPF Nomination பட்டனை கிளிக் செய்யவும்.
- E-Sign பட்டனை கிளிக் செய்தால் மொபைலுக்கு OTP வரும். அதை பதிவிட்டால் முடிந்தது.