உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதமர் மோடியும் அடிக்கடி உத்தரப்பிரதேசத்துக்கு சென்று வருகிறார். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீரட் சென்ற பிரதமர், மேஜர் தயானந்த் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த பல்கலைக்கழக்கம் நவீன மற்றும் மிகச்சிறந்த உட்கட்டமைப்புகளுடன் கட்டப்பட உள்ளது. இந்த விழாவுக்கு முன்பு அங்கு ஏற்கனவே இருக்கும் விளையாட்டு மைதானத்தையும், அங்கிருக்கும் உட்கட்டமைப்புகளையும் பார்வையிட்டார். அப்போது, உள்விளையாட்டு அரங்கில் இருந்த ஜிம்மை பார்வையிட்ட அவர், திடீரென வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தார். இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை.
அங்கிருந்தவர்களுக்கே வியப்பாக இருந்தது. பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
குறிப்பாக, யோகாவை சர்வதேச அளவில் பிரபலப்படுத்திய அவர், ஆண்டுதோறும் யோகா நாளையும் நாட்டு மக்களுடன் சேர்ந்து கடைபிடித்து வருகிறார்.
உத்தரப்பிரதேச தேர்தல் களம் மிகப் பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில் பிரதமர் மோடி கூலாக வொர்க் அவுட் செய்த வீடியோ, அம்மாநிலத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வைரலாக பரவியுள்ளது.