ரயில்வே அமைச்சகம் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்தால், நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள்.
சில அங்குல தூரத்தில் ஒரு நபர் மரணத்தில் இருந்து தப்பிய காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
தண்டவாளத்தில் ரயில் வேகமாக வந்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ரயில் அருகில் நெருங்கி வருவதை பார்த்த அந்த நபர், தண்டவாளத்தில் வந்து படுத்துக் கொண்டார். இதைப்பார்த்த ரயில் ஓட்டுனர் அவசரத்திலும் தனது விவேகமான செயலால், அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டது.
இந்த வீடியோ மும்பையில் உள்ள ஷிவ்டி ஸ்டேஷனில் இருந்து எடுக்கப்பட்டது. அங்குள்ள சிசிடிவி கேமராவில் (CCTV Camera) பதிவாக காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் ரயில் பாதையில் ஒரு நபர் கவனக்குறைவாக நடந்து செல்வதில் இருந்து கிளிப் தொடங்குகிறது. ரயில் அந்த நபரை நெருங்கும்போது, அந்த நபர் திடீரென தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார்.
அந்த நபர் தனது கழுத்தை தண்டவாளத்தின் மீது வைத்து, இரண்டு தண்டவாளங்களுக்கு இடையில் படுத்துக் கொண்டார். ரயில் ஓட்டுனர் அவசரகால பிரேக்கை இழுத்ததால், ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
மேலும் அருகில் இருந்த ரயில்வே ஸ்டேஷனில் இருந்து சில RPF பணியாளர்கள் அவரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அந்த நபரை நோக்கி வேகமாக ஓடி, அவரை அழைத்து வருகின்றனர். இந்த சம்பவம் காலை 11:45 மணியளவில் நடந்துள்ளது.
அந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம், “மோட்டார்மேன் செய்தது பாராட்டுக்குரிய பணி. மும்பையில் உள்ள செவ்ரி ரயில் நிலையத்தில், தண்டவாளத்தில் ஒரு நபர் கிடப்பதைப் பார்த்த மோட்டார்மேன், அவசரகால பிரேக்கைப் பயன்படுத்தியதன் மூலம் அந்த நபரின் உயிரைக் காப்பாற்றினார்.
உங்கள் வாழ்க்கை விலைமதிப்பற்றது, உங்களுக்காக வீட்டில் காத்திருக்கிறார்கள்” இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டு உள்ளது.
இந்த வீடியோ (Viral Video) ஒரு லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர், சுமார் 900-க்கும் அதிகமானோர் பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.