
ஆம் தால்
தேவையானவை:
மாம்பழத் துண்டுகள் – ஒரு கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
பச்சை மிளகாய் – 2, கடுகு,
கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், எண்ணெய் – தாளிக்கத் தேவையான அளவு, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
பாசிப்பருப்புடன் மாம்பழத் துண்டுகளைச் சேர்த்து குக்கரில் வேகவிடவும். பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி… வெந்த பருப்பு – பழ கலவை, உப்பு, சுத்தம் செய்த மல்லித்தழை சேர்த்து, ஒரு கொதிவிட்டு இறக்கவும். இதை சப்பாத்தி, இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.