இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
எஸ்பிஐ வங்கி
IMPS Immediate Payment Service சேவைக்கான வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து 5 லட்சமாக உயர்த்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் பல நாள் கோரிக்கை தற்போது நிறைவேற்றியுள்ளது.
கூடவே மற்றொரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த வசதிக்கு சேவை கட்டணம் இல்லை என குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் பேங்கிங் சேவையை ஊக்குவிக்கும் வகையில், இன்டர்நெட் மற்றும் மொபைல் பேங்கிங் மூலம் செய்யப்படும் 5 லட்சம் வரையிலான ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகளுக்கு எந்தவித சேவைக் கட்டணமும் விதிக்கப்படுவதில்லை என பாரத ஸ்டேட் வங்கி முடிவு செய்துள்ளது.
ஆன்லைன் வழியாக பணம் செலுத்துபவர்களுக்கு IMPS சேவை மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் உடனடியாக பணம் அனுப்ப முடியும். தேவைப்படுபவர்களுக்கு எல்லா நாட்களும் எல்லா நேரத்திலும் பணம் அனுப்ப முடியும். விடுமுறை நாட்களில் கூட இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.
அதே நேரம் இந்த சேவைக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் . எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்படி, 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரையிலான IMPS பரிவர்த்தனைகளுக்கு 20 ரூபாய் கட்டணம் ஜிஎஸ்டியுடன் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை ஏற்கெனவே இருக்கும் எஸ்பிஐ வங்கியின் NEFT/RTGS பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களுடன் ஒத்துப்போகின்றன.