spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?Xiaomi 11T Pro Hyperphone: சிறப்புக்கள்..!

Xiaomi 11T Pro Hyperphone: சிறப்புக்கள்..!

- Advertisement -

சியோமி நிறுவனத்தின் Xiaomi 11T Pro Hyperphone என்ற புதிய ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஜனவரி 19, 2022 ஆம் தேதி அன்று இந்தியாவிற்கு வரும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த அறிமுக தேதியை அதிகாரப்பூர்வ வெளியீட்டின் மூலம் நிறுவனம் உறுதி செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. இந்தியாவில் சாதனத்தை அறிமுகப்படுத்த Xiaomi மதியம் 12 மணிக்கு மெய் நிகர் நிகழ்வை நடத்தும் என்று அறிவித்துள்ளது.

இந்த புதிய சாதனம் ஏன் ஹைப்பர்போன் என்று அழைக்கப்படுகிறது என்பதற்கு சில காரணங்கள் உள்ளது. அதைப்பற்றியும், இந்த புதிய ஸ்மார்ட்போனின் சில விவரக்குறிப்புகள் கூட நம்பகமான டிப்ஸ்டர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விபரங்களையும் பார்க்கலாம்.

இத்துடன் இந்த புதிய சியோமி 11டி ப்ரோ ஹைப்பர்போன் ஸ்மார்ட்போனின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவலையும் முனைக்கூட்டியே அறிந்துகொள்ளலாம்.

Xiaomi இந்தியா சமீபத்தில் Xiaomi 11i மற்றும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் ஸ்மார்ட்போன்களை அறிவித்தது.

Xiaomi 11i தொடர் வெளியீட்டு நிகழ்வின் முடிவில், நிறுவனம் ஒரு புதிய “Hyperphone” டப்பிங் ஸ்மார்ட்போனின் வருகையை டீஸ் செய்தது.

11i ஹைப்பர்சார்ஜிற்குப் பிறகு, இந்த சாதனம் 120W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும் இந்தியாவிற்கான பிராண்டின் இரண்டாவது ஸ்மார்ட்போனாகும்.

இதனால் தான் இந்த சாதனம் ஹைப்பர்போன் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவிற்கான ஹைப்பர்போன் பட்டியலில் Xiaomi 11T ப்ரோவைத் தவிர வேறு எந்த மாடலும் இப்போது வரை இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Xiaomi 11T Pro 5G அல்லது Xiaomi 11T Pro ஹைப்பர்போன் என்று அழைக்கப்படும் இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம், 6.67′ இன்ச் கொண்ட AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

இந்த டிஸ்பிளே 120Hz புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய Xiaomi 11T Pro ஹைப்பர்போன் சாதனம் சக்தி வாய்ந்த ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த புதிய ஹைப்பர்ஃபோன் பிராண்டிங் காரணமாக, இது 120W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவில் Xiaomi 11T ப்ரோவை மட்டுமே பார்க்க முடியும், அதுவும் அதன் வெண்ணிலா மாறுபாட்டின் Xiaomi 11T மாடலை நாம் பார்க்க முடியாது என்று கூறப்படுகிறது.

தெரியாதவர்களுக்கு நினைவுகூர, Xiaomi Xiaomi 11T மற்றும் Xiaomi 11T ப்ரோவை 2021 இல் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இப்போதைக்கு, நிறுவனம் இந்தியாவில் Xiaomi 11T ப்ரோவை அறிமுகப்படுத்துவதை மட்டுமே குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும், MediaTek Dimensity 1200 சிப்செட் மூலம் இயக்கப்படும் வெண்ணிலா Xiaomi 11T இந்தியாவில் வெளியிடப்படுவதை முற்றிலுமாக நாம் நிராகரிக்க முடியாது.

டிப்ஸ்டர், யோகேஷ் ப்ராரின் கூற்றுப்படி, Xiaomi 11T Pro ஹைப்பர்போன் விலை சுமார் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சுமார் ரூ. 40,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள OnePlus 9RT மற்றும் Samsung Galaxy S21 FE ஆகியவற்றுடன் நேரடியாக எதிர்த்துப் போட்டியிட்டு நிற்கும் என்றும் டிப்ஸ்டர் தகவல் குறிப்பிடுகிறது.

மிகச் சமீபத்தில், Xiaomi 11i மற்றும் Xiaomi 11i ஹைப்பர்சார்ஜ் உட்பட இரண்டு ஸ்மார்ட்போன்களுடன் Xiaomi 11i தொடரை நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது.

இதில் சியோமி நிறுவனத்தின் Xiaomi 11T தொடரில் இந்தியாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சியோமி நிறுவனத்தின் அறிவிப்புப் படி, வரும் ஜனவரி 19, 2022 ஆம் தேதி அன்று இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளதால், சாதனத்தின் அதிகாரப்பூர்வ விவரக்குறிப்புகள் மற்றும் விலை இந்தியச் சந்தையில் வெளிவருவதற்கு அதிக நேரம் இல்லை என்பது கவனிக்கத்தக்கது.

மிகவும் வேகமான சார்ஜிங் அம்சத்துடன் இன்னும் பல அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவரத் தயாராகி வருவதால் சியோமி ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe