ஒரு சாலையோர மட்டம் சூப் விற்பனை கடையில் கடைக்காரர் சூப் குடிக்க வருபவர்களுக்கு ஒரு கப்பில் சூப் ஊற்றி கொடுக்கிறார்.
அவர்களும் சூப்பை குடித்துவிட்டு அதில் இருக்கும் எலும்பை சப்பி சாப்பிட்டுவிட்டு அங்கேயே கீழே போட்டு விடுகின்றனர்.
பிறகு அவர்கள் சென்றதும், அந்த கடைக்காரர் மீண்டும் அந்த எலும்புகளை எடுத்து கழுவி சூப்பில் போட்டுவிடுகிறார். புதிய கஸ்டமர்களுக்கு அந்த எலும்பையே கொடுக்கிறார்.
இந்த மாதிரியான ஒரு வீடியோவை தான் ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் சென்னை காரப்பாக்கம் அரவிந்த் திரையரங்கு அருகே இந்த சூப் கடை இயங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதே நேரம் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்த தகவல்கள் இல்லை. இது எப்போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவில்லை. எது எப்படியோ சூப் பிரியர்களே கொஞ்சம் உஷாரா இருங்க.