பாம்புக்கும் கீரிக்கும் இடையிலான சண்டை காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் கீரிகளைப் போன்று தோற்றமளிக்கும் விலங்கு கூட்டமாக சேர்ந்து, நாகப்பாம்பை தாக்குவதைக் காணமுடிகிறது.
வைரலாகி வரும் இந்த வீடியோவில் கீரிகளை போன்ற பல விலங்குகள் பாலைவனத்தில் சுற்றித் திரிவதை காணலாம். அங்கே ஒரு ராஜ நாகப்பாம்பு ஒன்று தனது போக்கில் அமர்ந்திருக்கிறது.
கீரி ஒன்றின் கண்களில் தனது பரம எதிரியான ராஜ நாகப்பாம்பு பட்டவுடன், அதனை தாக்க திட்டமிடத் தொடங்குகிறது. பாம்பும் அதனை பயங்கரமான முறையில் பழிவாங்குகிறது.
சிறிது நேரம் கழித்து கீரிகளின் கூட்டம் அங்கே வந்து அனைத்து பக்கங்களிலிருந்தும் ராஜ நாகப்பாம்பை சுற்றி வளைக்கிறது. கீரிகள் எப்படி திட்டமிட்டு பாம்பை சுற்றி வளைத்தது என்பது வீடியோவை பார்த்தாலே புரியும்.
எல்லாப் பக்கங்களிலிருந்தும் கீரிகள் சூழ்ந்த பிறகும், பாம்பு பின் வாங்கும் மனநிலையில் இல்லை என்பதை இந்த வீடியோவில் மேலும் காணலாம். கடுமையாக பதிலடி கொடுக்க முயன்றது. இருப்பினும், இந்த வீடியோவின் முடிவில் என்ன நடந்தது என்று சொல்ல முடியவில்லை.
பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும்.
அந்த வீடியோ நேஷனல் ஜியோகிராஃபிக் யுகே யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 96 லட்சத்துக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது.
வைரல் வீடியோவில் கீரியை போல தோற்றமளிக்கும் விலங்குகள் மீர்கட் என்று அழைக்கப்படுகின்றன, அவை ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. அவை சிறிய கீரி என்றும் அழைக்கப்படுகின்றன.