இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்று சாமியார் நித்தியானந்தா தெரித்துள்ளார். நித்தியானந்தா அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். யுடியூபில் ஒருவர் சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
அதற்கு கண்டனம் தெரிவித்த நித்தியானந்த அவரை சரமாரியாக திட்டியதோடு வாலை சுருட்டிக்கொண்டு வேலைபார்க்க வேண்டும் என்றும் இந்து மதத்தை இழிவுப்படுத்த எவனுக்கும் உரிமையில்லை என்றும் தெரித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் பேசுகையில், பகுத்தறிவு பன்னாடைகளா என்று கடும் சொற்களால் பேச்சை தொடங்கினார்.
மேலும் பகுத்தறிவு என்ற பெயரில் இந்து மதத்தை இழிவுப்படுத்தி பேசுபவர்களை பணத்திற்காக எதையும் சாப்பிடும் பன்றிகள் என்று உவமைப்படுத்தினார். சட்ட ஒழுங்கை சீர்குழைப்பதற்காக மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதையே வேலையாக கொண்டிருக்கும் சமூக விரோதிகள், சட்ட விரோதிகள், இந்து விரோத கட்சிகளின் அடிவருடிகள், எலும்பு துண்டுக்கு நக்கும் நாதாரிகள், இந்து மத விரோதிகள் தங்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்க்கையை பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்துமத சொற்பொழிவு ஆற்றி கல்லா கட்டுபவர்களும், சில அரசியல் கட்சிகளும், நடனம் பயின்று நடராஜரை தெய்வமாக வணங்கும் நடனகலைஞர்களும், இப்படி யாரும் ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத நிலையில் கைலாசாவிலிருந்து நித்யானந்தா வீடியோ வெளியீட்டு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.