
மே 20ம் தேதி வரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 30 முதல் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வருகிற 20ம் தேதி மாலை 5 மணிவரை யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இணையதள பக்கமான ugcnet.nta.nic.in ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது. விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் மே 21 முதல் 23ம் தேதி வரையிலான 4 நாட்கள் மேற்கொள்ளப்படும்.
தேர்வு நடத்தப்படும் மையங்களின் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. அந்த தேர்வுகளையும் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ள தேர்வையும் சேர்த்து ஒரே நேரத்தில் நடத்தப்பட உள்ளது.
அதன்படி வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது என்று தெரிய வருகிறது. ஆனால் தேதிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றவும்:
ugcnet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இனையதளத்திற்கு செல்லவும்.
*ஹோம்பேஜில் உள்ள விண்ணப்பப் படிவ இணைப்பை கிளிக் செய்ய வேண்டும்.
*பதிவு செய்த பின்னர், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
அதில் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் ஒன்றுவிடாமல் பூர்த்தி செய்த பின்னர், உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.
*உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்து, உறுதிபடுத்துதல் பக்கத்தை (கன்பர்மேஷன்) பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பொதுப்பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக ரூ.1,100, பொது&இடபிள்யூசி, ஓபிசி, என்சிஎல்&க்கு ரூ.550 கட்டணமும் மற்றும் எஸ்.சி., எஸ்.ட., பிடபிள்யூடி, மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் ரூ.275 கட்டணமும் செலுத்தி விண்ணப்பிக்கலாம் என்று யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.