
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஒரு பூனை நகைச்சுவையை ஏற்படுத்தி இருக்கிறது.
சமுக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் தான் இதுபோன்ற பல நகைச்சுவையான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு வருகிறது.
ட்விட்டரில் சிசிடிவி இடியட்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பூனையின் வீடியோ பகோரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், நடைபாதை ஒன்றில் கருஞ்சாம்பல் மற்றும் வெண்மை நிறம் கலந்த கொழுகொழுவென்று ஒரு பூனை படுத்திருப்பதை காண முடிகிறது.
அந்த பூனை வயிறு நிறைய உணவை உண்டுவிட்டு மல்லாக்க படுத்துக்கொண்டு, எந்திரிக்க முடியாமல் முகத்தை உர்ரென வைத்துக்கொண்டு தனது கால்களை ஆட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சி பார்ப்பதற்கு மிகவும் நகைச்சுவையாக அமைந்துள்ளது.
இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான நெட்டிசன்கள் ரசித்துள்ளனர், இந்த வீடியோவிற்கு நான்காயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று இருக்கிறது.
பூனையின் செயலை ரசித்து சிரித்த பலரும் இதனை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் நகைச்சுவையான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
Getting beach body ready 😂pic.twitter.com/b1iroPQRpN
— CCTV_IDIOTS (@cctv_idiots) April 27, 2022