
நீலகிரியில் அசால்ட்டாக பாம்பை தூக்கி புற்றுக்குள் விடுவித்த சிறுமியின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

குன்னூர் அருகே ஆலோரை என்ற கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா வீட்டு வாசலில் சுற்றித்திரிந்த பாம்பை லாவகமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரை என்ற கிராமம். இங்குள்ள புதருக்குள் இருந்து வெளியில் வந்த 6 அடி நீளம் கொண்ட பாம்பு குடியிருப்புகளுக்குள் செல்ல முற்பட்டது.

இதனைக் கண்டு வர்மா என்பவரின் 4 வயது மகள் ஸ்ரீ நிஷா அந்த பாம்பை லாவகமாக பிடித்து அருகில் இருந்த பாம்பு புற்றுக்குள், அச்சமின்றி விடுத்தார்.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்ற கூற்றுக்கு மாறாக, இளம் கன்று பயமறியாமல் பாம்பினை பிடித்தது அந்த கிராம மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
