சிவகங்கை மாவட்டம் இளையான்குடி காவல் நிலைய சரகம், இளையான்குடி கலிபா தெருவில் உள்ள முகமது ரோஷன் (பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா) என்பவரது வீட்டில் இன்று தேசிய புலனாய்வு முகமையைச் சேர்ந்த விகாஸ்குமார், வினோத்குமார் ஆகியோர் இளையான்குடி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பாரதிதாசன் என்பவர் முன்னிலையில்,ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்தனர். முகமது ரோஷன் வீட்டில் இல்லாததால் அவரது மைத்துனரிடம் விசாரணை செய்தனர்.
அதனைத் தெரிந்து கொண்ட இளையான்குடி பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சிவகங்கை மாவட்டச் செயலாளர் அப்பாஸ் அலி என்பவர் தலைமையில் பலர் வீட்டின் முன்பு தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) வெளியேறு என்ற கோஷங்களை எழுப்பினர். மேற்படி சோதனையை முடித்துக் கொண்டு அங்கிருந்து (என்.ஐ.ஏ) குழுவினர் புறப்பட்டு சென்றனர்.