
ஸ்ரீரங்கம் காவிரிப்பாலம் ஒருவழியாக இன்று திறக்கப்பட்டது! இத்தனை நாட்களும் இந்தப் பால வேலைகளால் ஒருவழியான திருச்சி ஸ்ரீரங்கம் மக்கள் இதனால் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
நிலாவிற்கு பாலம் கட்டி இருந்தால் கூட இப்படி சந்தோஷப்பட்டிருக்க முடியாது போல! அவ்வளவு ஜவ்வ்வுவுவுவு போல இழுக்கப்பட்டு முடிக்கப்பட்டது! என்று திருவரங்க நகர் வாசிகள் பெருமூச்சு விட்டனர்.
பாலம் திறக்கப்பட்டதை அடுத்து, திருச்சி காவிரிப்பாலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. பராமரிப்பு பணிகளுக்காக கடந்த 6 மாத காலமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்த நிலையில், பணிகள் முடிந்து பாலத்தில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப் பட்டது.
திருச்சியை கடக்கும் வாகனங்கள் கடந்த 6 மாதங்களாக போக்குவரத்து நெரிசலில் அவதிப்பட்ட நிலையில், இனி வழக்கம்போல பயணிக்கலாம் என்பதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.