Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஅடடே... அப்படியா?தேவிகுளம் எம்.எல்.ஏ., தகுதியிழப்பு; இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கை!

தேவிகுளம் எம்.எல்.ஏ., தகுதியிழப்பு; இந்து முன்னணி வெளியிட்ட அறிக்கை!

பட்டியலினத்தவருக்காக ஒதுக்கபட்ட தொகுதியில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் தங்களை இந்து என்று பொய்யாக அறிவித்துகொண்டு போட்டியிடுவதும் அதன் மூலம் இந்து மதத்தில் இருக்கும் பட்டியலினத்தவரின் வாய்ப்பை பறிப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது என்று, இந்து முன்னணி – மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை..

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் A.ராஜா வெற்றி செல்லாது கேரள மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கேரளமாநிலத்தின் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி 67% தமிழர்கள் அதிலும் குறிப்பாக பட்டியலினத்தவர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதியாக தேவிகுளம் தொகுதி விளங்குகிறது.

கடந்த 2021-ல் நடைபெற்ற கேரள மாநில சட்டமன்ற பொது தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கபட்ட தொகுதியாக தெவிகுளம் சட்டமன்ற தொகுதி இருந்தது.

அந்த தொகுதியில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த A.ராஜா என்பவர் போட்டியிட்டர் வேட்புமனு பரிசீலனையின்போதே வேட்பாளர் பட்டியல் வகுப்பை சார்ந்தவர் அல்ல என்றும் கிறிஸ்தவர் என்றும் ஆட்சேபித்து வேட்புமனுவை நிராகரிக்க கோரி கான்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கோரிக்கை வைத்தும் அவரின் ஆட்சேபனை நிராகரிக்கபட்டு தேர்தல் நடைபெற்றது.

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட A.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கபட்டார் அதை எதிர்த்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதிமன்றம் மேற்சொன்ன A.ராஜா கிறிஸ்தவர் என்பதாலும் பட்டியல் வகுப்பை சாரதவர் என்பதாலும் அவரின் பெற்றோர்கள் கிறிஸ்தவர்கள் என்றும் அவரின் மனைவியின் நல்லடக்கம் கிறிஸ்தவ முறையில் நடைபெற்றது என்றும் உறுதி செய்து கிறிஸ்தவர் பட்டியலினத்தவருக்கான தொகுதியில் போட்டியிட்டது/வென்றது செல்லாது என்று அறிவித்துள்ளது.

வேட்பு பரீசீலனையின்போதே தவறான பொய்யான வேட்புமனுக்களை தள்ளுபடி செய்யும் அதிகாரம் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கபட்டுள்ளது ஆயினும் கேரள மாநிலம் ஜனநாயகத்துக்கு போராடுபவர்களுக்கு பேர்போன கம்யூனிஸ்ட்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலம் என்பதாலும் தேவிகுளம் வேட்பாளர் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்பதாலும் கடும் ஆட்சேபனைக்கு பின்னரும் வேட்புமனு ஏற்றுகொள்ளபட்டுள்ளது.

தற்போது உயர்நீதிமன்றத்தால் தேர்தல் செல்லாது என்று அறிவிக்கபட்டதால் அந்த தொகுதி தேர்தலுக்கு செலவிட்ட மக்களின் வரிப்பனம் வீணானது மேலும் இடைத்தேர்தல் நடத்தபடும் செலவும் அதில் ஈரோடு கிழக்கு மாடல் பிரச்சாரமும் நடைபெற்றால் மேலும் மேலும் மக்களின் வரிப்பணம் வீணடிக்கபடும்.

பட்டியலினத்தவருக்காக ஒதுக்கபட்ட தொகுதியில் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்கள் தங்களை இந்து என்று பொய்யாக அறிவித்துகொண்டு போட்டியிடுவதும் அதன் மூலம் இந்து மதத்தில் இருக்கும் பட்டியலினத்தவரின் வாய்ப்பை பறிப்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது மேலும் வேலை வாய்ப்பிலும் கல்வி பெறுவதிலும் இதே போன்று இந்து பட்டியலினத்தவரின் வாய்ப்புகள் கிறிஸ்தவர்களால் பறிக்கபடுகிறது இதனால் இட ஒதுக்கீடு சட்டத்தின் நோக்கம் தோல்வியடைவதோடு பட்டியலினத்தவரின் முன்னேற்றம் தடைபடுகிறது.

தமிழகத்தில் நிலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.ராசா அவர்களின் மனைவி காலமானபோது அவரும் தேவிகுளம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.ராஜா அவர்களின் மனைவி கிறிஸ்த மத முறைப்படி அடக்கம் செய்யபட்டது போலவே அடக்கம் செய்யபட்ட புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது அதே போல விசிகவின் தலைவர் திருமாவளவன் பல பேட்டிகளில் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்றும் கிறிஸ்தவ வழிபாட்டை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார் ஆனால் இவர்கள் இருவருமே தங்களை இந்து என்று பொய்யாக அறிவித்து பட்டியலினத்தவருக்கக ஒதுக்கபட்ட தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார்கள், அந்த வகையில் மேற்கண்டவர்களின் தேர்தல் வெற்றி மக்கள் பிரநிதித்துவ சட்டம் மற்றும் இட ஒதுக்கீடு சட்டத்தின் தோல்வியாகவும் மிக எளிதாக முறைகேட்டில் ஈடுபடும் வகையிலும் தேர்தல் சட்டங்களும் இட ஒதுக்கீடு சட்டங்களும் இருக்கின்றன என்பதற்கு உதாரணமாகும்.

மேலும் கம்யூனிஸ்ட்களின் பேச்சு ஒன்றாகவும் செயல் மோசடியாகவும் மட்டுமே இருக்கும் என்பதற்கு தேவிகுளம் தொகுதி சட்டசபை தேர்தல் ஒரு உதாரணமாகும் ஜனநாயக மாண்பு சமூகநீதி மற்றும் பட்டியலினத்தவர் உரிமை பாதுகாக்கபடவேண்டும் என்று மேடை தோறும் முழங்கும் கம்யூனிஸ்ட்கள் பட்டிலினத்தவர்களுக்கக ஒதுக்கபட்ட தேவிகுளம் சட்டமன்ற தொகுதியில் கிறிஸ்தவரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அம்பலபட்டுபோயிருக்கிறார்கள் என்பதோடு அவர்கள் இந்த நாட்டையும் நாட்டின் சட்டங்களையும் எங்ஙனம் மதிக்கிறார்கள் என்பதும் தெளிவாகியுள்ளது.

எனவே தேர்தல், வேலை வாய்ப்பு மற்றும் கல்வி போன்றவற்றில் இந்துக்களின் இடஒதுக்கீடு பயன்கள் பறிபோவதை தடுக்க கடுமையான நடைமுறைகள் ஏற்படுத்தவேண்டும் என்றும் தவறு நிகழாவண்ணம் இடஒதுக்கீடு மற்றும் மக்கள் பிரநிதித்துவ சட்டங்கள் மேம்படுத்தவேண்டும் என்றும் தவ்று செய்யும் மற்றும் தவ்றுக்கு உடைந்தயாக இருக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி கேட்டுகொள்கிறது.