
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி முதல் அருணாசலபுரம் வரை செல்லும் பேருந்து தடம் எண் 13A இந்தப்பேருந்தில் உள்ள இருக்கை மிகவும் மோசமாக உள்ளது, கூட்ட நெரிசலில் ஒருவர் தவறி விழுந்தால் கூட உயிர் போகும் பரிதாபநிலை இப்படி பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லாத பேருந்தை இயக்க அனுமதி அளித்த அதிகாரி யார் ? அவர் மீது நடவடிக்கை எடுப்பது யார் ?எப்போதுமே நடந்த பின் நடவடிக்கை எடுத்து பயன் என்ன வரும் முன் காப்பது கிடையாதா ? ஏழைகள் பயணிக்கும் பேருந்து என்பதால் இந்த நிலையா ? இந்த பேருந்தை இயக்க அனுமதி அளித்த அதிகாரியின் காரின் இருக்கை இப்படி இருந்தால் பயணிப்பாரா ?



