சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திரையுலகினர் திரண்டு வந்து மௌன போராட்டம் நடத்தினர். மௌனம் என்றால் தியானம்!
ஆனால் ஓரிருவர் இதில் மைக் பிடித்துப் பேசினர். குறிப்பாக சத்யராஜ்.! அதற்கு பலரும் விமர்சித்த நிலையில், நடிகர் விஜய்யின் தூங்கும் முகத்துடனான போராட்ட போஸ் இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப்பரவி வருகிறது.
கூடவே.. அண்ணே இது தூங்கு மூஞ்சி போராட்டமோ, ரெஸ்ட் எடுக்கும் போராட்டமோ இல்லீங்க… இது போராட்டமுங்க.. போராட்டம். மௌன போராட்டம்… என்று கருத்திட்டு வருகின்றனர்.
ஆனால் விஜய் அசதியில் மாநாட்டுப் பந்தலில் தூங்கிவிட்டார். ரசிகர்களின் ஆரவாரத்துக்கு இடையே, அவர் தூங்கிய படத்தைப் போட்டு… அண்ணன் நைட்ல மேட்ச் பாத்துட்டு வந்தாரு.. அதான்! விடுங்கப்பா… என்று ஒரு சிலரும்,
மத்திய அரசு, காவிரி விவகாரத்தில் எப்படி தூங்கு மூஞ்சித் தனமாக இருக்கிறது என்பதை எங்க அண்ணன் சிம்பாலிக்கா செஞ்சி காட்டிட்டாரு… என்று சிலருமாய் விஜய்யின் தூக்கத்துக்கு விளக்கவுரை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.





