ஊழலுக்கு எதிராக செயல்பட்டு சாட்டையைச் சுழற்றி வரும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழகத்தை விட்டு அனுப்புவதற்காக, ஊழலில் திளைத்துள்ள திராவிடக் கட்சிகள், மிக மோசமான செயல் ஆக பெண்களை வைத்து காய் நகர்த்தி வருகிறது.
அதன் ஒரு கட்டமாக, செவ்வாய்க்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரத்தைக் கையில் எடுத்து, ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் செய்து வரும் நிலையில், தற்போது ஆளுநர் கலந்து கொண்ட பழைய புகைப்படங்களை தூசு தட்டி எடுத்து வெளியிடும் முயற்சியில் திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
அண்மையில் ஆளுநர், தஞ்சாவூர்- திருவையாறில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நாட்டியம் ஆடிய குழந்தையைத் தட்டிக் கொடுத்து பாராட்டு தெரிவித்தாராம். இந்தப் புகைப்படத்தை எடுத்து, இப்போது சமூக வலைத்தளச் சுற்றில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் சில கட்சிகளின் ஐடி பிரிவைச் சேர்ந்த சமூக வலைத்தள உலவுநர்கள்.
இப்போது இந்தப் படமும் சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது… “பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளிப்பதற்காகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பெண் செய்தியாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிக் கொடுத்தார். இதில் ஏற்பட்ட சர்ச்சை அடங்வதற்குள் கோயில் நிகழ்ச்சிக்காகத் திருவையாறு வந்தபோதும் ஆளுநர் இப்படித்தான் நடந்துகொண்டார் என அவர்மீது குற்றச்சாட்டு கிளப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்” என்ற தகவல்களுடன்!