January 26, 2025, 5:55 PM
28.9 C
Chennai

என் குடும்பத்தை பற்றி பேசு… சவால் விடுத்த சரத்குமார்! ஆனா… பேசிட்டாங்களே!

சென்னை: பாஜக.,வின் ஹெச்.ராஜா வுக்கு பதில் அளிக்க விரும்பிய நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், செய்தியாளர்களிடம் பேசிய போது,  என் குடும்பத்தை பேசு…  நீ ஆம்பிளையா இருந்தா என் குடு ம்பத்தைப் பேசு என்று ஹெச்.ராஜா வுக்கு சவால் விடுத்தார்.

மேலும், ஹெச்.ராஜாகேவலமான அரசியல் செய்கிறார், அநாகரீகத்தின் உச்சம். அவர் தேசியச் செயலர் என்ற பொறுப்பில், இயக்கத்தில் இருந்து கொண்டு பேசுகிறார்.  நாகரீகம் இல்லாமல் பேசும் அவர்,  கருத்துக்கு மறு கருத்து சொல்லலாம். ஆனால்,  குடும்பத்தை இழுப்பது மிகப்பெரிய தவறு.

நாளையே என் தனிப்பட்ட வாழ்க்கையை, இழிவு படுத்த முடியுமா? அவர் மீது  மத்திய அரசு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிறப்பு பற்றி இழிவு படுத்துவது எவ்வளவு தவறு என்பதை அவர் உணர வேண்டும்.  ராஜா பற்றி விமர்சிக்கலாமா நாம்? ஏன் என் குடும்பத்தை திட்டுங்க… சரத்குமாரை திட்டுங்க… சரத்குமார் மனைவியை திட்டுங்க.. நான் உங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறேன். இது பொது பிரச்னை என்று நான் பார்க்கிறேன். ஆனால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.. எனவே ஒரு பதினைந்து நாள் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு, இனி ஒவ்வொருவரும் அடுத்தவர் குடும்பத்தை பற்றிப் பேசுவோம்… என்று கூறினார் சரத் குமார்.

அவரது பேச்சு ஊடங்களில் வெளியான நிலையில், அவரை வம்பிக்கிழுத்து சமூக ஊடகங்களில் இதோ நாங்கள் பேசுகிறோம் என்று பல விதங்களில் மீம்ஸ்கள், கேலி கிண்டல் என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

இது பெரிய இந்திய நாட்டின் வரலாறா? என்று கூறிய சிலர், சரத் குமாரின் பின்னணி குறித்து ஒரு பதிவை இட்டு அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். அந்தப் பதிவு இதுதான்…

#சரத்குமாரின் வரலாற்று
பின்னணியை திரும்பி பார்ப்போமா….
யார் இந்த சரத்குமார்..?? மிகவும் பாரம்பரியம் மிக்க பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் டெல்லியிலும், பெங்களூரிலுமாக வளர்ந்தவர்…

இவரது தந்தை இராமநாதன்.. தாயார் புஷ்ப லீலா அம்மாள்..
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் சரளமாக பேச தெரிந்த இவர் தொடக்கத்தில், பத்திரிக்கையாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார்…

ALSO READ:  முடுவார்பட்டி காளியம்மன் கோவில் 48ஆம் நாள் மண்டல பூஜை!

பின்னர் பைனான்ஸியராக களமிறங்கிய இவர், சினிமா தயாரிப்பு தொழிலிலும் இறங்கினார்… “மிஸ்டர் இந்தியா”பட்டம் பெற்ற இவர், உயிருக்குயிராக காதலித்து மணந்த மனைவியே பேரழகு நிறைந்த அறிவு, பண்புகள் நிறைந்த சாயாதேவி..
இருவரும் கொட்டிவாக்கம் ஏரியாவில் இரண்டரை கிரவுண்டு நிலம் வாங்கியதில் 50சதவீதம் சாயாவிற்கும்,50சதவீதம் சரத்திற்கும் சொந்தமாக இருந்தது…

ஆனால் பின்னாளில் சரத்திற்கே முழு பங்குகளும் வந்து விட்டது…
முதலில் தான் தயாரித்த படங்களிலும்,குணசித்திர வேடங்களிலும் நடித்த சரத்குமாரை வற்புறுத்தி,செல்வமணியின் புலன் விசாரணை படத்தில் வில்லனாக அறிமுகம் செய்ய காரணமானவர் நடிகர் விஜயகாந்த்…

தொடர்ந்து சரத்திற்கு வாய்ப்புகள் குவிய, கதாநாயகனாகவும் ஆனார்…
அத்துடன் இதயம் பட நாயகியும், இந்திய விமானப்படை அதிகாரியின் மகளுமான டெல்லி வரவு ஒருவருடன் நெருக்கமான நட்பு உண்டானது…

பின்னர் அந்த டெல்லி வரவு முரளி, அஜீத் என திசைமாறி, ஒரு கட்டத்தில் திரையுலகை விட்டே காணாமல் போனது…
பின்னர் வந்தவரே மும்பை திரைப்பட உலகின் நாயகியும், மிகப் பெரிய டெக்ஸ்டைல்ஸ் தொழிலதிபர் அரவிந்த் மொரார்ஜியின் மகளுமான நந்திதா மொரார்ஜி என்ற நக்மா…

நக்மாவின் தாயார் ஷாமாகாஸி என்ற சீமாவின் இரண்டாவது கணவரும்,
இந்தி சினிமா தயாரிப்பாளருமான சந்தர் சதானாவிற்கு பிறந்தவர்களே நடிகை ஜோதிகா, அவரது அக்கா ராதிகா சதானா, தம்பி ஒருவர்…
இந்த மாற்றாந்தந்தையாலே நக்மா நடிப்புலகில் தள்ளப்பட்டவர்…

நக்மாவின் முதல் காதல் தோல்வியில் முடிய, சிலகால இடைவெளிக்குப்பின் சரத்துடன் நல்ல நட்பு கிடைத்தது… அப்போது சரத் குமார் “ரகசிய போலீஸ்”படமெடுத்து மிகுந்த பண நஷ்டத்திலும், மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார்… நக்மாவின் செல்வ வளம் மிக்க குடும்ப பின்னணியும், அழகும்,செல்வாக்கும் சரத்திற்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது…
நக்மாவின் பல கோடி ரூபாய் பணம், சரத்திடம் கைமாறியது…
நக்மாவின் உதவியால் சில பிரச்சினைகளை சமாளித்த சரத், பின்னர் நக்மாவுடனான “லடாயில்” , மேற்படி நடிகையை மிகவும் நேசிக்கும் இன்டர்நேஷனல் தாதாவின் ஆட்கள், சென்னைக்கே வந்து நடுகடலுக்கே நடிகரை தூக்கி போய் கவனித்த நிகழ்வும் நடந்தது…

ALSO READ:  நெல்லை வரதராஜ பெருமாள் கோயில் பரமபத வாசல் திறப்பு ரத்து; இந்து முன்னணி கண்டனம்!

இடையில் இரு கணவர்களை விவாகரத்து செய்து விட்டு, லண்டன் தொழிலதிபர் கணவரிடம் பிடுங்கிய கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி நடத்தி கொண்டிருந்த ராதிகாவின் ராடான் நிறுவனம் தயாரித்து, சன்டிவியில் ஒளிபரப்பிய கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை பெற்ற சரத்குமாருக்கு, ராதிகாவுடனான நட்பு மேலும் இறுக்கத்தை அடைய,
தனது பிரச்சினைகள் தீரவும், சில காரணங்களுக்காகவும் தனது காதல் மனைவி சாயாதேவியை, இரு வளரும் மகள்களுடன் உதறி தள்ளினார்…

இதன் பின்னணியே ரயில் நடிகைதான். நக்மா அல்ல. நக்மா சில உதவிகளை செய்து, ஏமாற்றப்பட்டவர்… எங்கே தனது காதல் கணவருடன் பார்த்து, பார்த்து ரசித்து வீட்டை வடிவமைத்து, அழகான வேலைப்பாடுகளுடன் வீட்டை ரசனையாக வைத்திருந்து,
தனது கணவருடனும், இரு மகள்களுடனும் ஒரு மஹாராணி போல வாழ்ந்த சாயாதேவி, தனது கொட்டிவாக்கம் பங்களாவை விட்டு, தனது இரு மகள்களுடன்
மிகுந்த மனவலியுடன் வெளியேறினார்…

அந்த வீட்டின் உள்ளே தனது லண்டன் கணவருக்கு பிறந்த மகளுடன் உள்ளே புகுந்தார் ரயில் ராதிகா… ஒரு அழகான குடும்ப கூடு கலைக்கப்பட்டு, அங்கே கரையான்
புற்று அமர்ந்த கதை… இந்த குடித்தனத்தில் ஒரு மகன்…
ரயில் ராதிகாவுடன் ஜோடி சேர்ந்து, சுற்றியதில் திமுகவில் எம்பி சீட் கிடைத்து, எம்பியானார் சரத்.. அங்கும் தயாநிதிமாறன் கொடுத்த நோஸ்கட்டில், இருவரும் வெளியேறினர்..

அதற்குமுன் அதிமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ததில், சட்டமன்றத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதும் இவர்கள் இருவரையும் படு மட்டமாக விமர்சனம் செய்தபடி, ஆட்டோவில் வந்து சாணி உருண்டைகளை வீட்டில் அடித்து விட்டு போயினர் சிலர்… அப்போது இருவரும் லண்டனுக்கு போய் விட்டனர் முன்கூட்டியே
சாயா மிகுந்த பேரறிவு கொண்டவர்… ரசனையான பெண்மணி.
“பிளவர் பொக்கேஸ்” செய்வதிலும், வீட்டை அழகாக அலங்கரிப்பதிலும் வல்லவர்…
தனது திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இலா கிச்சன்ஸ்என்ற இன்டீரியர் டெக்கரேஷன் நிறுவனத்தை நடத்தி வருகிறார்…

சரத்தின் மறைந்த அண்ணன் சுதர்சனமும் மனைவியை கைவிட்டவர்தான்.. கட்டிய மனைவியை கைவிட்ட இவர், ஷைலா என்ற மலையாள பெண்மணியுடன் குடும்பம் நடத்தி வந்தார்…  இவரது மனைவி ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் “உணவகம்”நடத்தி, அதன் மூலமாக நீலாங்கரையில் சொந்த வீடு கட்டி,
தனது குழந்தைகளையும் படிக்க வைத்து வந்தார். ஒரு கார் விபத்தில் சுதர்சனம் இறந்து விடவே, தனக்கு பாரா முகம் செய்த கணவரது உடலை பார்த்து
கதறி அழுதாராம் அந்த மனைவி. ஆக மொத்தம், சகோதர உறவுகள் இருவருமே ஒருவரையொருவர் தோற்றவர்கள் இல்லை…

ALSO READ:  நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

அவர் பரிதாபமாக இறக்க, இவரோ ஒரு வயதான பெண்மணிக்கு கணவர் உத்தியோகம் பார்க்கிறார்… தனது காதல் மனைவிக்கு பிறந்த, தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைக்காமல், சினிமாவில் கதாநாயகி ஆவதை வேடிக்கை பார்த்தவர், யாரோ ஒரு வெளிநாட்டு தொழிலதிபருக்கு பிறந்த மகளுக்கு “தந்தை”என பத்திரிக்கைகளில் அறிவித்து, அந்த பெண்ணின் நிச்சயத்தில் இவர் தந்தையாகிறார்…

…- இப்படியாகப் போகிறது இந்தப் பதிவு.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பது தவறு என்றாலும், சமூகத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து காட்ட வேண்டிய இவர்கள், மற்றவர்களை விமர்சிக்கும் போது, தாங்கள் அந்த விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கிறோமா என்பதை ஒருகணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஊடக வெளிச்சம் விழுந்து விட்டால், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால்,  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை சரத் குமார் போன்றவர்கள் உணர வேண்டும். சவால் விட்டதற்கு ஏற்றபடி யார் யாரெல்லாமோ ஹெச்.ராஜாவுக்கு வேலை வைக்காமல் மிகக் கடுமையான விமர்சனங்களை சரத் குமார் மீது வைத்து வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது.

என்னைப் பற்றி பேசு என் மனைவியை பற்றி பேசு என்று ஒரு தலைவர் இப்படி பொது வெளியில் பேசுவது அநாகரிகம் என்பதை சரத் குமார் உணரட்டும். அநாகரீக திராவிட அரசியல் முற்றுப் பெறட்டும். ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் தமிழகம் இனி தலை தூக்கட்டும்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week