ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் அப்பல்லோவிடம் இல்லையாம். மறைந்த முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியும், அவரது வாரிசாக அறிவிக்க வேண்டி , பெங்களூருவைச் சார்ந்த, அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் , வழக்கு ஒன்றினை தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி, வைத்தியநாதன் முன், கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ரத்த மாதிரிகள், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ளதா என்பதை தெரிவிக்க கோரி, அம்ருதாவின் வழக்கறிஞர் முறையிட்டார்.
அதன்படி, அப்பல்லோ மருத்துவமனைக்கு , ‘நோட்டீஸ்’ அனுப்பி , இன்றுக்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார் . இந்த வழக்கில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகள் தங்களிடம் இல்லை. சிசு மாதிரிகளை தாங்கள் எடுக்கவே இல்லை என அப்பல்லோ சார்பில் சென்னை ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.