பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து : டுவிட்டரில் ராகுல்!

இந்தியா சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

 

rahul tweet image - 2026பிரதமர் மோடிக்கு “உலக நாடக தின” வாழ்த்து என்று தெரிவித்துள்ளார், டுவிட்டரில் ராகுல் காந்தி!

ஒரு முக்கிய அறிவிப்பு என்று கூறி, பாதுகாப்பு துறை தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிவிப்பிற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. இந்த அறிவிப்பு குறித்து தாங்கள் தேர்தல் ஆணையத்தை அணுக இருப்பதாகவும் அவை கூறின.

முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனால் நாடெங்கிலும் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக வலைத்தளங்களில், மோடி என்ன சொல்லப்போகிறாரோ என்ற பரப்ராப்பும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டிருந்தது.

தாம் 11.45 முதல் 12 மணிக்குள் ஓர் அறிவிப்பு வெளியிடப் போவதாக அவர் கூறியிருந்ததால், பலரும் டிவி., ரேடியோ, டிவிட்டர், பேஸ்புக் என திறந்து வைத்துக் கொண்டு, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்னர்.

ஆனால் 12 மணி கடந்தும் பிரதமர் மோடியிடம் இருந்து அறிவிப்பு ஏதும் வரவில்லை. இந்நிலையில், தாம் அறிவித்த நேரத்தை விட சற்று தாமதமாக தமது உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி, செயற்கைக் கோள்களைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தொழில்நுட்பம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப் பட்டதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த சோதனையை வெற்றிகரமாக செய்த 4வது நாடு இந்தியா. இது பாதுகாப்பு துறையில் நடந்த முக்கிய சோதனை என அறிவித்தார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மோடியின் உரைக்கு எதிர்க் கட்சிகள் வழக்கம் போல் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேர்தல் நேரத்தில், இது போன்ற அறிவிப்பு தேர்தல் விதிகளை மீறியதாகும் என குற்றம்சாட்டி உள்ளன. இது தொடர்பாக ரேத்தல் கமிஷனிடம் புகார் அளிக்க உள்ளதாக அவை கூறியுள்ளன.

இருப்பினும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் அறிவிப்புகள் வெளியிட தேர்தல் ஆணைய அனுமதி தேவையில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும், சர்ஜிகல் ஸ்ட்ரைக் விவகாரத்தில், எங்களாலும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்த இயலும் என்று ராகுல் காந்தி கூறியது போல், இப்போதும் எக்களாலும் சாட்டிலைட்டை சுட முடியும் என்று டிவிட் போடாடதது தான் பாக்கி என்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.