படேல் பாரதத்தை ஒருங்கிணைக்க, சமஸ்தானங்களை ஒழித்தது பெரிய விசயமே இல்லையாம். இந்த விசயத்தில் படேல் ஒரு அடி பாய்ந்தால், இந்திராகாந்தி பாய்ந்தது 16 அடியாம். அதாவது,
படேல், எல்லா மன்னர்களுக்கும் மாசாமாசம் பெரிய தொகையைக் கொட்டிக் கொடுத்து வீண் செலவு செய்து ஒருங்கிணைத்தது எல்லாம் ஒரு விசயமே இல்லை. கிழக்குப் பாகிஸ்தானை உடைக்காமல் விட்டது பெருங்குற்றம். இந்திராகாந்தி வந்து தான் மன்னர்களுக்குக் கொடுத்த மானியங்களை அடியோடு நிறுத்தி புரட்சி செய்தார். கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து பங்களாதேஷ் ஆக்கினார். ஆகவே…. எழுதியவர் ஒரு முதிர்ச்சியான மனிதர் என்பதால், நாமும் விளக்கத்தை பொறுமையாகவே கொடுப்போம்….
இ.காந்தி மானியத்தை நிறுத்தியது சாதனையல்ல! காரணம், எந்தவொரு படைபலமும் இல்லாத, போர் உத்தியோ, ராஜாங்க விசயமோ சுத்தமாகத் தெரியாத இரண்டாம் தலைமுறையினரிடம் இருந்து மிரட்டிப் பிடுங்கிக் கொண்டார். ஒருவகையில் அது கொடுத்த வாக்கினை மீறிய துரோகம் எனினும், ஒரு ராஜாங்க நடவடிக்கையாக அதனை நாமும் கூட ஏற்றுக் கொள்ளவேண்டும்.
ஆனால், பட்டேல் கால சூழல் முற்றிலும் வேறு, இரண்டு உலகப் போர் நிகழ்வுகளையும் உற்றுக் கவனித்த அனுபவமிக்க மன்னர்களும், இந்திய மற்றும் உலகப் போர்களில் ஈடுபட்ட படை வீரர்களையும் கொண்டிருந்த சிற்றரசுகள். நயந்து பேசி காரியத்தை முடிப்பது தான் புத்திசாலித்தனம். அதனைவிட்டு எல்லா இடத்திலும் பலப்பிரயோகம் செய்து மட்டுமே ஒருங்கிணைத்திருந்தால், அமெரிக்கா, ஜப்பானில் நிகழ்ந்தது போல பெரிய உள்நாட்டுப் போர்கள் தான் நடந்திருக்கும். பாரத மக்களிடமும் ஓர் ஒருமைப்பாடு தோன்றியிருக்காது. (ஒருமைப்பாடு தோன்றி விடக் கூடாது என்பது தான் பலரின் ஆசையாகவும் இருந்தது)
அமெரிக்கா இன்று வரை யுனைட்டட் ஸ்டேட்ஸ் தான். பாரதம் அப்படியல்ல. மாநிலத்திற்கொரு சட்டமல்ல… ஒரே பாரதத்திற்கும் ஐக்கிய அமெரிக்க மாகாணங்களுக்கும் நிச்சியமாக வேறுபாடுகள் உண்டு. அங்கே தான் பட்டேல் ராஜதந்திரியாக மிளிர்கிறார். தடவிக் கொடுத்து, பக்குவமாகச் சொல்லி, கைமாறு கொடுத்து, லாப நஷ்டங்களை விவாதித்து ஒருங்கிணைப்புகளை நடத்தினார். எதற்கும் மசியாத ஆட்களிடம் தான் படைபலத்தைப் பிரயோகிக்கத் தயாரானார். முழு வெற்றியும் கொண்டார்.
இப்படி ஒருங்கிணைத்த, 12-1 வருடங்களில் தன்னை நன்கு ஸ்திரப்படுத்திக் கொண்ட பாரதத்தின் பிரதமராக மன்னர் மானியத்தை ஒழித்ததில் என்ன வீரம் கிடக்கு? எதிர்ப்பே இல்லாத நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை அமல்படுத்துவது பெரிய சாதனையா? எனினும், அந்த நகர்வு மிகவும் சிறப்பானதே! இ.காந்தி எடுத்த நல்ல முடிவுகளில் ஒன்று தான்.
கிழக்குப் பாகிஸ்தானை உடைத்து, பாரதத்துடனா இணைத்துக் கொண்டார் இந்திரா? மேற்கிலிருந்து இந்தியா வழியாக கிழக்குப் பாகிஸ்தானுக்கு சாலைகள் கேட்டது உள்ளிட்ட பல நச்சரிப்புகளில் எரிச்சலாகி சும்மாயிருந்து தொலைங்கடானு மண்டையில் நறுக்குனு கொட்டிட்டு, இனிமேல் நீ அவனோட பேசாத அவன் உன்கூட பேசமாட்டான்னு ரெண்டு அறை விட்டுட்டு வந்தோம் அவ்வளவு தான். இந்திரா அத்தனை வலிமையான ஆளுமையாக இருந்திருந்தால், நேரு காலத்தில் நிகழ்ந்த சங்கடத்திற்கு சீனாவிடம் தீர்வு கண்டிருப்பாரே?
நடிகர் மனோபாலா சொன்னது போல, நாம இதுவரை யாரையெல்லாம் அடிச்சிருக்கோம்னு தெரியும்ல? தமிழ் வாத்தி, பிள்ளையார் கோவில் குருக்கள் போன்ற அப்பிராணிகளைத் தான். மோடியைப் பிடிக்காதுனு சொல்றதைக் கூட சரி ட்ரெண்டுனு ஜீரணிச்சுக்க முடியுது… அதுக்காக நேருவிய காங்கிரஸ் செய்ததையெல்லாம் சாதனைனு சொல்றது ரொம்ப ஓவர் சார். காங்கிரஸின் சாதனை என்பது கொஞ்சம் ராஜீவுக்கும், மிச்சம் எல்லாம் நரசிம்மராவ் மற்றும் அவரது டீமுக்கு தான் சேரும்.
எழுதியதன் நோக்கம், காங்கிரஸின் சாதனை என்று போடும் மொக்கைகளை எல்லாம் இன்றைய இளம் தலைமுறை இது போன்ற நாசூக்கான பதிவுகளை அப்பட்டமாக நம்பி விடக் கூடாது என்பதற்காகத் தான்.




