
இந்த வருட குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது உயிரி எரிபொருள் நிரப்பப்பட்ட An-32 விமானத்தை பறக்க வைக்க உள்ளது விமானப்படை.
குடியரசு தினத்தின் போது வானில் விமானப் படை விமானங்கள் பறந்து சாகச நிகழ்ச்சியை நடத்துவது முக்கியமான கண்கவர் நிகழ்ச்சி. இது இந்தியாவின் ராணுவ வலிமையை பறைசாற்றுவதாய் அமைகிறது.
விமானப்படையின் எரிபொருள் கொள்முதலை 10% வரை குறைக்கும் முயற்சியில் விமானப்படை தனது An-32 விமானத்தை உயிரி எரிபொருள் கொண்டு பறக்க வைத்து சாதனை படைத்தது.
சண்டிகர் விமான தளத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் விமானம் 45 நிமிடம் வானில் பறந்தது. அதாவது விமானம் 10% உயிரி எரிபொருள் மற்றும் 90% ஏவியேசன் டர்பைன் எரிபொருளை பயன்படுத்தி பறந்தது.
எரிபொருள் சேமிப்பு மட்டுமல்லாமல் கார்பன் வெளியீட்டையும் உயிரி எரிபொருள் பயன்பாடு குறைக்கும். இந்த விமானம் தற்போது குடியரசு தினவிழாவில் உயிரி எரிபொருளுடன் பறக்கவுள்ளது குறிப்பிடத் தக்கது.