December 6, 2025, 6:40 PM
26.8 C
Chennai

பிரஜா சங்கல்ப பாத யாத்திரையை திருமலை திருப்பதியில் நிறைவு செய்த ஜெகன் மோகன் ரெட்டி!

jaganmohanreddy - 2025

திருப்பதி: 3648 கிலோ மீட்டர் பிரஜா சங்கல்ப பாத யாத்திரை நிறைவை தொடர்ந்து திருப்பதியில் இருந்து திருமலைக்கு மலையேறி சென்று தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திரா முழுவதும் கடந்த 14 மாதங்களாக பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் சுமார் 3648 கிலோ மீட்டர் பாத யாத்திரையாகச் சென்று மக்களை சந்தித்து வந்தார் ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி.. இந்நிலையில் இன்று திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து மலையேறி சென்று இலவச தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தார்.

ஆந்திர எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரில் நடத்திய யாத்திரை கடந்த 14 மாதங்கள் ஆக ஆந்திரா முழுவதும் நடைபெற்று நேற்று முன்தினம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் இச்சாபுரத்தில் நிறைவடைந்தது

இந்த நிலையில் இச்சாபுரத்தில் இருந்து ரயில் மூலம் இன்று காலை ரேணிகுண்டா ரயில் நிலையம் வந்தடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள் வரவேற்று திருப்பதி வரை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

தொடர்ந்து திருப்பதி மலை அடிவாரத்துக்கு சென்ற ஜெகன்மோகன் ரெட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் ஆகியோருடன் திருப்பதி மலைக்கு நடந்து மலை ஏறிச் சென்றார்.

இடையில் திவ்ய தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசிப்பதற்காக வழங்கப்படும் இலவச தரிசனம் டோக்கனை ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சியினர் வாங்கினர்.
தொடர்ந்து மலையேறி சென்ற ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்டோர் பக்தர்களோடு பக்தர்களாக இலவச திவ்ய தரிசனத்தில் வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.

ஜெகன்மோகன் ரெட்டி வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பிரஜா சங்கல்ப யாத்திரை என்ற பெயரிலான பாத யாத்திரையை துவங்குவதற்கு முன்னதாக ஜெகன்மோகன் ரெட்டி ஏழுமலையானை தரிசித்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories