போகி… புகை… திணறல்..! சென்னையில்தான்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல் விழாக்கள் விசேஷங்கள்
bhogi - 2026

புகை மயமானது சென்னை! போகியால்! சுற்றுச் சூழல் குறித்த அரசின் விழிப்புணர்வு கருத்துக்கள் காற்றில் பறந்தது!

போகி பண்டிகை அன்று பழைய பொருட்களைக் கொளுத்துவதை பாரம்பரிய மரபாக பின்பற்றுவர்கள் ஏராளமானோர் உண்டு. இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே மக்கள் பழைய பொருட்களை எரிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக சென்னை நகரம் தற்போது புகை மயமாகி வருகிறது.

இதனிடையே, சென்னையில் கடும் பனி மூட்டத்தால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எதிரில் செல்பவர், அல்லது பொருள்கள் கண்ணுக்குத் தெரியாமல் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இன்று காலை சென்னைப் பனி மூட்டத்துக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சாலை தெரியாததால் மின்கம்பத்தில் மோதி அஸ்வின்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர், திண்டுக்கல் நகராட்சி அதிகாரியின் மகன் என்று தெரியவந்தது.

வட மாவட்டங்களில் போகிப் பண்டிகைக்கு பழைய பொருள்களை எரித்து போகி கொண்டாடினர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பொதுமக்கள் போகி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.

போகி பண்டிகை என்பது இந்திரன் முதலியோரை பூஜித்து, திருப்தி செய்ய வேண்டிய நாள். போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகள், தேவையில்லாத பழைய பொருட்கள் ஆகியவற்றை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது மக்களின் நம்பிக்கை. பிறகு வீட்டின் வாசலைக் கழுவி சுத்தம் செய்து கோலம் போடும் பழக்கம் உண்டு.

இதே போன்ற கடலூர் மாவட்ட பகுதியை சுற்றியுள்ள சி.என்.பாளையம், நடுதெரு, காமாட்சி பேட்டை, தோப்பு தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகை கொண்டாடினர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.