அபிநந்தனை இம்ரான் விடுவித்தது ஏன்? சீமான் பரபரப்பு பேச்சு!

அடடே... அப்படியா? நகைச்சுவை லைஃப் ஸ்டைல்

onrekalpakkanaledu copy - 2026

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் எப்படி உடனடியாக விடுவித்தது என்பது குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் சீமான் பரபரப்பாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் எத்தனையோ இந்திய ராணுவ வீரர்கள் சிறைக்கைதிகளாக உள்ளனர். வழிதவறி கடல் வழியே தவறுதலாக செல்லும் மீனவர்களும், எல்லைப் பகுதியில் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு வழி தவறி பாகிஸ்தான் நாட்டு எல்லையை மிதித்துவிட்ட இந்திய நாட்டு மக்களும் கைது செய்யப் பட்டு, அவர்கள் அனைவருக்கும் உளவாளிகள் என்று முத்திரை குத்தப் பட்டு, தனிமைச் சிறையில் சித்திரவதை செய்யப் பட்டு வருகின்றனர்.

ஆனால், பாகிஸ்தானின் ராணுவ வலிமையைப் பறை சாற்றும் எஃப் 16 வகை விமானத்தை சுட்டு வீழ்த்திய விமான அபிநந்தன், தவறுதலாக சீட்டில் இருந்து உந்தித் தள்ளப்பட்டு பாகிஸ்தான் எல்லையில் விழுந்திருந்த போதும், அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பத்திரமாக மீட்டு, இரு நாட்களில் பத்திரமாக திருப்பி அனுப்பி உள்ளனர். இது உலக மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே இம்ரான் கான் தான் இந்த நல்ல செயலைச் செய்தார் என்று பலரும் மெய்சிலிர்த்து பேசிக் கொண்டிருந்த போது, நாம் தமிழர் கட்சியின் சீமான் இது குறித்து தெரிவித்த போது,

இம்ரான் கான் தெனமும் என் பேச்சை கேட்டுவிட்டு தான் தூங்குவாப்ல… தம்பி அபிநந்தன கைது பண்ணிட்டு அவர் கிட்ட உனக்கு எந்த ஊர்ன்னு கேட்டு இருக்காப்ல… அவரு தமிழ்நாடுன்னதும்…. ஆஹா எங்க அண்ணெ சீமானு ஊரான்னு கேட்டுட்டு… விடுதலை பண்ணிட்டாப்ல.. ஆஹ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா… என்றார் கைதட்டிக் கொண்டும் சிரித்துக் கொண்டும்!

எச்சரிக்கை :  – இது நம் ஒன்றேகால் பக்க நாளேடு – 

seeeman - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.